logo

படைப்பு 'பதிப்பகம்'

Showing 141 - 154 of 154

Year

என் தெருவில்  வெஸ்ட் மினிஸ்டர் பாலம்

  • கோ. ஸ்ரீதரன்

0   1133   0  
  • September 2018

அஞ்சல மவன்

  • கட்டாரி

0   1243   0  
  • September 2018

வெட்கச் சலனம்

  • அகராதி

1   1419   1  
  • September 2018

கடவுள் மறந்த கடவுச்சொல்

  • ஜின்னா அஸ்மி

1   1883   2  
  • September 2018

கை நழுவும் கண்ணாடிக் குடுவை

  • கவி விஜய்

0   1248   0  
  • September 2018

மௌனம் திறக்கும் கதவு

  • ஜின்னா அஸ்மி

0   1695   0  
  • August 2017

நிலவு சிதறாத வெளி

  • காடன்

0   1504   0  
  • August 2017

இலைக்கு உதிரும் நிலம்

  • முருகன். சுந்தரபாண்டியன்

0   1249   0  
  • August 2017

நிசப்தங்களின் நாட்குறிப்பு

  • குமரேசன் கிருஷ்ணன்

0   1295   0  
  • August 2017

இந்தப் பூமிக்கு வானம் வேறு

  • ஆண்டன் பெனி

1   1359   1  
  • August 2017

நதிக்கரை ஞாபகங்கள்

  • ஜின்னா அஸ்மி

0   1485   0  
  • August 2017

நினைவிலிருந்து எரியும் மெழுகு

  • ஆனந்தி ராமகிருஷ்ணன்

0   1276   0  
  • August 2017

உடையாத நீர்க்குமிழி

  • ஜின்னா அஸ்மி

0   1352   0  
  • August 2017

அசோகவனம் செல்லும் கடைசி ரயில்

அகதா

நீண்டு கிடக்கும் இந்தத் தமிழ் இலக்கிய நிலப்பரப்பில் கவிதை பயிர் செய்வதென்பது பிரியங்களின் பிரயத்தனம். வடிவங்களாகச் சூழ்ந்து நிற்கும் இந்த வாழ்வை இலகுவான அர்த்தங்களையே ஆயுதமாகக் கொண்டு அறுவடை செய்யப்பட்டு இருப்பதே இந்த "அசோகவனம் செல்லும் கடைசி ரயில்". எல்லாக் காலகட்டத்திலும் பெண்மொழியை முன்மொழியும்போது அது எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது விமர்சனமாகவோ அல்லது விமரிசையாகவோ. படைப்பாளி என்று வரும்போது நாம் எந்தப் பேதமையும் பார்க்காமல் அவர்தம் படைப்பை மட்டுமே முன்னிறுத்திப் பார்க்கும் வகையில் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது இத்தொகுப்பை.

படைப்பாளி "அகதா" அவர்கள் தன் ஆசிரிய(ர்)க் கண்களோடு ஓர் உலகத்தையும், ஆச்சரிய கண்களோடு மற்றோர் உலகத்தையும் பார்க்கிறார். அதனால்தான் ஓரிரவில் வரும் விண்மீன்களை ஓராயிரம் இரவானாலும் கண்களால் கணக்கிட இயலாது எனத் தெரிந்து வரிகளையே வானமாக்கி வாழ்வியலையே விண்மீன்களாக்கி கவிதையால் கணக்கிட்டு கடைசி ரயிலையும் முன்னால் கொண்டுவந்து முதல் நடைமேடையில் முன்னிறுத்தி இருக்கிறார். சாமானியர்களுக்கும் சட்டெனப் புரியும் எளிய மொழியில் இயல்பாக எடுத்துச் சொல்லும் மெல்லிய உணர்வலைகளே இவரது கவிதைகள். பெரம்பலூரை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ்த்துறை முனைவரான இவருக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.

View

என் தெருவில்  வெஸ்ட் மினிஸ்டர் பாலம்

கோ. ஸ்ரீதரன்

மானுட அறிவின் நீட்சி காலத்தின் கைகளில் கணினியை ஒப்படைத்தது போல இலக்கியத்தின் புரட்சி கவிஞர்களின் கருக்களில் புதுக்கவிதைகளைப் பிரசவித்தது. அதிலும் படைப்பாளி கோ. ஸ்ரீதரன் அவர்கள் வாழ்வியல் வரிகளைத் தனக்குள்ளிருந்தே தரவிறக்கம் செய்துகொள்ளும் புதுவகை கவிதைக்கணினியை உருவாக்கி அதை வாசிப்பவரின் கைகளில் ஆயுள் ரேகையாக அணைக்கட்டினார். பின்பு அதில் பொங்கிவரும் மென்பொருள் வெள்ளத்தைத் தன் தெரு வழியாகப் பயணிக்க பாதை அமைத்தார். வேடிக்கைப் பார்க்க வெஸ்ட் மினிஸ்டர் பாலம் கட்டினார். கடைசியாக அதற்கு "என் தெருவில் வெஸ்ட் மினிஸ்டர் பாலம்" என்று பெயர் வைத்தார். இப்போது பொதுமக்கள் பயணத்திற்காகப் படைப்புக் குழுமம் பெருமையோடு திறந்து வைக்கிறது இப்பாலத்தை.

ஒப்பீடு செய்ய இயலாதபடி கவிதையின் படிமங்களைக் காலக்கண்ணாடியின் வழியே காட்டுகிறார். அதில் பார்ப்பவரின் பிம்பங்களைப் பிரதிபலிக்க வைக்காமல் இந்தச் சமூகத்தைப் பிரதிபலிக்கச் செய்து மாயக்கண்ணாடி-யாக்குகிறார். எல்லோருக்கும் எளிதில் புரியும் எதார்த்தத்தை இயல்பாக எடுத்துச் சொல்வதே இவரது கவிதைகள். சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட பொறியாளரான இவருக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் எதார்த்தக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.

View

அஞ்சல மவன்

கட்டாரி

View

வெட்கச் சலனம்

அகராதி

காதலென்பது உயிரூட்டப்பட்ட ஒரு பொருள். அதன் மொழியாத வார்த்தைகளையும் பகிராத அன்பையும் ஒளிப்பெயர்த்துக் கொண்டிருக்கும் நான்கு விழிகளின் ஆலாபனையே கவிதைகளாக உருமாற்றம் கொள்ளும். இதில் எந்த இரு விழிகள் வரிகள் வழியே சிறகுகளைத் தருகிறதோ மற்ற இரு விழிகள் அந்த சிறகைப்பற்றியே ஓருயிராக யுகம் தாண்டும். இப்படியாக யுகம் தாண்டும் பொழுதில் நிகழும் உணர்வுக் குவியல்களை ஒன்று திரட்டி ஒரு தொகுப்பாக வெளிவருவதே இந்த "வெட்கச் சலனம்". எந்த காலகட்டத்திலும் காதல் மொழிகளை ஏற்பதில் இந்த சமூகம் பல்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் எழுத்து வடிவில் எப்போதுமே அதை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் ஒரு பெண் அதை முன்மொழியும்போது அது இன்னும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது விமர்சனமாகவோ அல்லது விமரிசையாகவோ. படைப்பாளி என்று வரும்போது நாம் எந்த பேதமையும் பார்க்காமல் அவர்தம் படைப்பை மட்டுமே முன்னிறுத்திப் பார்க்கும் வகையில் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது இத்தொகுப்பை.

படைப்பாளி "அகராதி" அவர்கள் தன் குடுவைக் கண்கள் மூலம் உருகி வழியும் இவ்வுலகைப் பார்க்கிறார். அதிலும் தான் பார்க்கும் அனைத்திலுமே காதல் இருப்பதாக நினைக்கிறார். அவ்வாறு நினைக்கும்போது வந்து விழும் வார்த்தைகளை சூடு குறையாமல் சேகரித்து கவிதைகளாய் வார்த்தெடுத்திருக்கிறார். இப்படியாக வார்த்தெடுக்கப்பட்டவைகளை ஒன்றுசேர்த்து வடிவம் கொடுத்து நூலாக செய்திருக்கிறோம். மனதின் உள்ளாழங்களை வெளியில் வெளிப்படையாக இயல்பாக சொல்லும் மெல்லிய உணர்வலைகளே இவரது கவிதைகள். திருச்சியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர்.

View

கடவுள் மறந்த கடவுச்சொல்

ஜின்னா அஸ்மி

இப்பிரபஞ்சம் தோன்றிய நாள் முதல் திணை வேறுபாடின்றித் தலைமுறைகள் தமக்குள்ளாகவோ அல்லது காரணிகளால் உந்தப்பட்டோ தம்மைக் காலத்திற்கேற்றவாறு நவீனப்படுத்திக்கொள்கிறது எனினும் காதல் மட்டும் அப்படியே அதன் ஈர்ப்பும் ஆழமும் குறையாது மரபுகளில் கடத்தி வரப்பட்டுக்-கொண்டே இருக்கிறது. காதல் உலகைத் தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் ஆதி மந்திரம். அதனைத் தன் சிறு கவிதைகளால் இன்னும் மெருகேற்றி இருக்கிறது இக் “கடவுள் மறந்த கடவுச்சொல்’’. புதுக்கவிதை, நவீனம், பின்நவீனம், ஹைக்கூ போன்ற வகைமைகளின் வரிசையில் கஸல் கவிதைகளை உள்ளடக்கிய இப்புத்தகத்தினைத் தனது பெருமைக்குரிய வெளியீடாகத் தருகிறது படைப்புக் குழுமம். படைப்பாளி திரு. ஜின்னா அவர்களால் இக்கடவுச்சொல் வெளிப்படையாகவே சொல்லப்-பட்டிருப்பதால் வாசிப்பவர்கள் எழ எழக் காதலில் விழுவது திண்ணம்.

படைப்பாளி ஜின்னா அஸ்மி அவர்கள் கடலூரைத் தன் வாழ்விடமாகக் கொண்டவர். தற்போது பெங்களூரு மாநகரத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணினித் துறையில் பணி செய்பவர். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது தொகுப்பாக இக்கடவுச்சொல்லைக் காணத் தருகிறார். இருபதாண்டு கால இடை-வெளியில் சற்றும் குன்றாமல் இன்னும் இளமையோடே வெள்ளைக் காகிதத்தில் வண்ணம் தெளித்துக்கொண்டே வந்திருக்கிறது இவரின் எழுத்துக்கள்.

View

கை நழுவும் கண்ணாடிக் குடுவை

கவி விஜய்

ஆதிக்காலம் தொட்டே சுருங்கச் சொல்லிப் பெரிய பொருள் தரும்படி இலக்கியங்கள் படைப்பது தமிழின் சிறப்பாக இருந்துவருகிறது. இரு வரிகளில் எடுத்துச் சொன்ன திருக்குறளும் ஒரே வரியில் உரக்கச் சொன்ன ஆத்திச்சூடியும் வாழ்வியல் நெறிகளை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்ட இலக்கியங்களுக்குச் சான்று. ஜப்பானிய ஹைக்கூ, லிமரைக்கூ போன்ற குறும்பாக்கள் வகைமைகள் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வந்திருந்தாலும் அவற்றை நம் தமிழ் மொழியின் தொடர்ச்சியாகவே படைப்பாளிகள் கருதியதால் மிக எளிதாக அவர்களை இன்று ஆக்கிரமித்துக்கொண்டன. இப்படிப்பட்ட ஆதிச்சரித்திரத்தின் நீட்சியாக வளர்ந்துவரும் குறும்பாக்களை உருவாக்குவதிலும் வெளிக்கொணர்வதிலும் படைப்புக் குழுமம் தன்முனைப்போடு இயங்கிவருகிறது.

அதன் உந்துதலே இக் “கை நழுவும் கண்ணாடிக் குடுவை’’ தொகுப்பு. இயற்கையையும் இன்றைய சூழலையும் வாழ்வியலும் அழகியலும் இணைத்துச் சொல்வது போலத் தன் குறும்பாக்களால் சிலாகிக்க வைத்திருக்கிறார் படைப்பாளி கவி விஜய். சேத்துப்பட்டை வசிப்பிடமாகக் கொண்டும், 'முதுநிலை வணிக நிர்வாகம்' பட்டதாரியுமான இவர் தனியார் நிறுவனமொன்றில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார். இவர் காற்றில் வீசும் கவியைக் குறு விதைகளாகத் தூவிச் சென்றதை இக் கண்ணாடிக் குடுவை வழியே வாசிப்பவரும் காணமுடியும்.

View

மௌனம் திறக்கும் கதவு

ஜின்னா அஸ்மி

கவிதைகளின் வடிவப்பெயர்ச்சி  வரலாற்றைச் சற்று உட்சென்று பார்த்தோமேயானால் அங்கு தனக்கென விதிகளை வகுத்துக்கொண்டு இப்படியாக இவ்விதிப்படி எழுதுவதே கவிதை என்றும் இதனுள் வருவதே வகைமை என்றும் எழுதி சிந்தனைகளை சிறைப்படுத்திக்கொள்ளும் ஒரு ஆதிக்க உத்தியாகவும் மேலாண்மைக் கபடமாகவுமே இருந்து வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகாக சமூகமாற்றங்களை வேண்டியும் ஒரு எளிய மனிதனின் வாழ்வியலை மற்றொரு எளிய மனிதனுக்குள் அழகியலோடு கடத்தி மனிதம் மிளிர்த்தும் எந்த வகைமைகளுக்குள்ளும் உட்படுத்தாத நவீனக் கவிதைகளுக்கு படைப்புக்குழுமமானது முன்னுரிமை அளித்து அப்படைப்புகளை சரியான முறையில் வெளிக்கொணரவும் செய்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் தன் குழுமத்தில் பதிவேற்றப்பட்ட சிறந்த கவிதைகளின் தொகுப்பாக"  மௌனம் திறக்கும் கதவு" எனும் பல்சுவைப் படையல்.

இத்தொகுப்பு வெளிவரக் காரணமாய் இருந்த படைப்புக்குழுமத்தின் தேர்வுக்குழுவினருக்கும், முழுத்தொகுப்பையும் வாசித்துணர்ந்து அழகியலோடு ஆய்வுரை அளித்த கவிப்பேரருவி. திரு. ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும் படைப்புக்குழுமம் தன் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

படைப்பு குழுமத்தின் சொந்த பதிப்பாக வெளிவரும் நூல் இது.  எமது பதிப்பகத்தின் மூலமாக தமது கவிதைகளை வெளியிட சம்மதம் தெரிவித்த குழும உறுப்பினர்கள் அனைவருக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

View

நிலவு சிதறாத வெளி

காடன்

புத்தகங்களைக் காதலிப்பவர்கள் தங்களுக்கான வாழ்தல் அடையாளங்களை மிகச் சீராக செப்பனிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் படைப்பவர்களானாலும், படிப்பவர்களானாலும் அவர்களோடு ஒருங்கே பயணிக்கும்  புத்தகங்களானது சுயநோயெதிர்ப்புத்திறன் அணுக்களைப் போலச் செயல்பட்டு தற்கால மானுடவியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் மனவலிமையை ஈந்து விடுகிறது என்பது மறுக்கவியலாக்கூற்று. அவ்வகையில் படைப்புக் குழுமமானது சமூகத்தின் ஒவ்வொரு எளிய மனிதனுக்குமான எழுத்துக்களை மிக இலகுவான இலக்கிய வடிவில் புத்தகங்களாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. 

‘’நிலவு சிதறாத வெளி’’ புத்தகத்தின் தலைப்பே ஈர்க்கும் வகையில் அமைத்துவிட்ட படைப்பாளி காடன் (எ) சுஜை ரகு. திருப்பூரை வாழ்விடமாகக் கொண்ட ஒளிப்படக்காரரான இவருக்கு இது முதல் தொகுப்பு. ஏற்கனவே வார இதழ்கள்  மற்றும் சமூக வலைத்தளங்களில் நன்கு அறியப்பட்ட இவர்  இவரது ஒளிக் கோணங்களைப் போலவே வெகுநேர்த்தியாக கவிதைகளைப் படைத்திருக்கிறார். ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு இப்புத்தகம் பெருவிருந்து என்பது திண்ணம். இக்கவிதைகளை வாசித்து என்பதை விட இதனுள் வசித்து என்பதே பொருத்தமாக இருக்கும் என்னும் அளவிற்கு சீரிய அணிந்துரை வழங்கிய திரு. அகன்(அமிர்த கணேசன்) அவர்களுக்கு படைப்புக் குழுமம் தன் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறது.

எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதை தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி திரு.காடன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

View

இலைக்கு உதிரும் நிலம்

முருகன். சுந்தரபாண்டியன்

இலக்கு என்னவென்றே தெரியாமல் ஓடிக்கொண்டு தன்னைச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தைக்கூட மறந்துவிட்ட அழுத்தம் பொதிந்த இவ்வாழ்வியலில் தன்னை ஒருவன் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுவதற்கான ஒரு அருமருந்து புத்தகம். பெரிய சமூக மாற்றங்களை எல்லாம் இலக்கில் இருத்திக் கொள்ளாது தன்கூடப் பயணிக்கும் சகமனிதனை, சமூகத்தைப் பார்த்து சிறுபுன்னகை ஒன்றை உதிர்க்கச் செய்துவிட்டால் அதுவே அப்புத்தகத்திற்கான மாபெரும் வெற்றி. அம்மாதிரியான எழுத்துக்களைக் கண்டறிந்து அவைகளைப் புத்தகங்களாக வெளிக்கொணர்ந்து இச்சமூகத்தில் நேசம் தழைக்கச் செய்வதில் படைப்புக்குழுமமானது எப்பொழுதுமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்.

அவ்வகையில் உறவின் செழுமைகளைப் போற்றும் தொகுப்பாக அமைந்திருப்பதே  “இலைக்கு உதிரும் நிலம்” கவிதைத் தொகுப்பு. திருநெல்வேலி மாவட்டம் செங்குளக்குறிச்சியை வாழ்விடமாகக் கொண்ட படைப்பாளி முருகன்.சுந்தரபாண்டியன் அருங்காட்சியகத்தில் பூட்டப்பட்ட தமிழை தான் சார்ந்த கணினித்துறையில் இருந்துகொண்டு மெருகேற்றுபவர். இது இவரின் முதல் தொகுப்பு என்னும் பட்சத்தில் வாசிப்பவர்கள் ஆச்சரியத்தோடே பக்கங்களைக் கடந்து செல்ல வேண்டுமாயிருக்கும். 

நீரோட்டச் சுழிப்பாதையில் சுழன்று படியும் மணற்படுகையைப் போல வெகு நேர்த்தியாக கவிதைகளுக்கான தன் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த திரு.கனா காண்பவன்(ஹரிஹர சுதன் ) அவர்களுக்கு படைப்புக் குழுமம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.

எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதை தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி திரு.முருகன்.சுந்தரபாண்டியன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

View

நிசப்தங்களின் நாட்குறிப்பு

குமரேசன் கிருஷ்ணன்

தமிழ்ச்சமூகமானது தன் ஆதிக்காலம் தொட்டே வாழ்வியல் நெறிகளை இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.எந்த ஒரு விடயத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல சுருங்கச் சொல்லினும் அதனுள் மலையளவு அர்த்தத்தைப் பொதிந்து வைத்திருப்பார்கள் நம் முன்னோர்கள். அதன் தொடர்ச்சியாகவே ஜப்பானிய ஹைக்கூ, அரேபியக் கஸல் வகைமைகள் வாசகர்களை ஆக்கிரமித்துக் கொண்டது. இருப்பினும் தன் ஆதிச்சரித்திரத்தின் நீட்சியாக படைப்புக்குழுமம் குறும்பாக்களை வெளிக்கொணர்வதிலும் தன்முனைப்போடு இயங்கி வருகிறது.

அதன் உந்துதலே இந் “ நிசப்தங்களின் நாட்குறிப்பு” தொகுப்பு. தமிழகத்தின் தென்பகுதியில் இயல்பாகவே அழகியலும் அனுபவங்களும் இறைந்து கிடக்கும். அவர்களின் வாழ்வியல் குறிப்புகளைத் தன் குறும்பாக்களால் சிலாகிக்க வைத்திருக்கிறார் படைப்பாளி குமரேசன் கிருஷ்ணன். சங்கரன்கோவிலை வாழ்விடமாகக் கொண்ட இவர் மின்சார வாரியத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார். தனது மண் வளத்தை, உறவுகளின் வலிமையை, அன்பின் ஆழத்தை குறு விதைகளாகத் தூவிவைத்திருக்கிறார். அவைகள் வாசிப்பவரினுள் விருட்சங்களாய் விரியும்.

ஒரு கண்ணாடிப் பேழையை வைர ஊசி கொண்டு வடிப்பதைப் போல இக் குறும்பாத்தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் திரு.மு.முருகேஷ் அவர்களுக்கு படைப்புக்குழுமம் தன் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது. 

எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதைத் தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி திரு.குமரேசன் கிருஷ்ணன்  அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

View

இந்தப் பூமிக்கு வானம் வேறு

ஆண்டன் பெனி

இப்பிரபஞ்சங்களின் அடுக்குகளில் தாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை, பாதித்தவைகளை வெகுநேர்த்தியாக அடுக்கிவைத்துச் சொல்பவையே கவிதைகள். அம்மாதிரிக் கவிதைகள் அப்பாவின் துருப்பிடித்த மிதிவண்டிச் சக்கரத்தைப் போல, மகள் பறக்கவிட்டு ரசிக்கும் சோப்புக்குமிழைப் போல வாசிக்கும் ஒவ்வொருவரையும் தனக்காக எழுதப்பட்ட கவிதைகளோ என்று சிலாகித்துச் சொல்லவைத்துவிடும். வெகுதூரம் கடந்துவந்த பாதையில் ஏதோ ஒரு முடுக்கில் ரசித்துவிட்டு வந்த மஞ்சள் பூக்களை மீண்டும் ஓடிச்சென்று பார்த்துவிட்டு வருதலைப் போன்ற அலாதியானவை இவ்வாழ்வியல் கவிதைகள் என்பது மிகையாகாது. அவ்வகையில் படைப்புக்குழுமம் தன் பெருமைக்குரிய வெளியீடாகத் தருவதுதான் " இந்த பூமிக்கு வானம் வேறு" கவிதைத் தொகுப்பு.

படைப்பாளி ஆண்டன் பெனி... இவர்தம் பெயரிலிருந்தே இவர் எவ்வாறு தன் அடுத்த தலைமுறைக்கு தன் சிந்தனைகளைக் கடத்துகிறார் என்பதை இவரைப்பற்றி நன்கறிந்தவர்கள் அறிவார்கள். தூத்துக்குடியைப் பிறப்பிடமாகவும் திருச்சியை வாழ்விடமாகவும் கொண்ட இச்சமூக நெறியாளர் வாரப்பத்திரிக்கைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் நன்கறியப்பட்டவர். இத்தொகுப்பில் தன் பால்யத்தின் படிமங்களை, பதின்மத்தின் வேரூடுதல்களை, இளமையின் வாஞ்சைகளை எளிய மொழியில் வாசிப்போரை ஒரு இலகுவான மனநிலையில் வைத்திருக்கும்படியான கவிதைகளைக் கோர்த்திருக்கிறார். இவருக்கு இணையான மற்றொரு ஆளுமை பெருமைக்குரிய கவிஞர். திரு ஆண்டாள் செழியன் ஒரு நெடிய கவிதையைப்போல தன் அணிந்துரையால் இந்நூலுக்கு மேலும் மெருகூட்டியிருக்கிறார். அவருக்கு படைப்புக் குழுமம் தன் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. 

எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதை தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி திரு.ஆண்டன் பெனி அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

View

நதிக்கரை ஞாபகங்கள்

ஜின்னா அஸ்மி

ஒரு தலைமுறையைச் சீர்திருத்திச் செப்பனிட்டு  அதன் ஆலகாலங்களை அடுத்தத் தலைமுறைக்குப் பிரதியெடுத்து அளிப்பதில் ஞாபகங்கள் பெரும்பங்கு வகிக்கிறது. ஞாபகங்களென்பது வெறுமனே கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தல்மட்டுமல்லாது நாம் கழற்றிப் போட்ட உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்வது. அப்படிப் புதுப்பிக்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் மனிதம் பூக்கும் என்பதும் திண்ணம். அவ்வகையில் படைப்புக் குழும்மானது தன் குழுமத்துக்கவிஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒவ்வொருவர் வாழ்வில்தம் பிணைந்த நதியைச் சுற்றிக்கிடக்கும் ஞாபகங்களைத் தலைப்பாக்கி கவிதை படைக்கக் கேட்டது. நதியலைகள் போல அழகாகக் காதல், பாசம்,  கோபம், வெறுமை, ஆனந்தம், பால்யம், வெட்கமென உணர்வுகளைப் பந்திவைத்தார்கள் கவிஞர்கள். அக்கவிதைகளைத் தொகுப்பாக்கிப் பரிமாறுவதில் பேருவகை அடைகிறது படைப்புக் குழுமம்.

கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டியாக நம் குழுமத்தில் நடத்திய "நதிக்கரை ஞாபகங்கள்" எனும் கவிதை போட்டியின் கவிதைகள் தொகுப்பே இந்நூல். இப்போட்டிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சிறந்த கவிதைகளினின்றும் மிகச்சிறந்த கவிதைகளை பரிசிலுக்காகத் தேர்வு செய்தும் சற்றும் சலிப்புறாது இத்தொகுப்பிற்கான வாழ்த்துரையையும் வழங்கி எங்களைப் பெருமைப்படுத்திய கவிஞர். அறிவுமதி அவர்களுக்குப் படைப்புக் குழுமம் தன் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது.

படைப்பு குழுமத்தின் சொந்த பதிப்பாக வெளிவரும் நூல் இது.  எமது பதிப்பகத்தின் மூலமாக தமது கவிதைகளை வெளியிட சம்மதம் தெரிவித்த குழும உறுப்பினர்கள் அனைவருக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

View

நினைவிலிருந்து எரியும் மெழுகு

ஆனந்தி ராமகிருஷ்ணன்

கவிதை செய்வதென்பது ஒரு முப்பட்டகத்தில் நிறப்பிரிகையைத் தருவிப்பதைப் போல. எவ்வாறு ஒரு நிறமற்ற ஒளி நிறங்களோடு பிரதிபலிக்கிறதோ அவ்வாறு ஒரு கவிதையானது வாசிப்பவரின் உள்ளில் பலவித உணர்வுகளை எழுப்பும்போது அக்கவிதை கொண்டாடப்படுகிறது. இத்தகைய கவிதைகளை பெண்கள் எழுதும்போது  இயல்பாகவே நளினமும் அழகும் சேர்ந்து மேலும் மெருகேற்றி விடுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எழுதுவதென்பது மிகக் குறைவு. சில தடைகளையும் மீறி ஒரு பெண் எழுதவரும்பொழுது அவர் தன்னைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தினரால் வீட்டுக்கு அடங்காதவளாகவும் எதிர்த்துப் பேசுபவளாகவும் சித்தரிக்கப்படுகிறார். இது போன்ற நிகழ்வுகள் இந்நவநாகரீக உலகம் பெண்களை இன்னும் பூட்டியே வைத்திருக்கிறதா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இத்தகைய நிலைப்பாட்டை உடைக்கும் வகையில் படைப்புக் குழுமம் பெருமையோடு வெளியிடும் " நினைவிலிருந்து எரியும் மெழுகு" கவிதைத் தொகுப்பு.

படைப்பாளி ஆனந்தி ராமகிருஷ்ணன் சூடுகுடித்து உருகி வழியும் மெழுகைப் போலவே தன் கவிதைகளை வார்த்தெடுத்திருக்கிறார். உருகும் மெழுகானது இயல்பாகத் தன் வடிவங்களைச் செய்யும் என்பதைப் போலத்தான்  இவரது கவிதைகள். ஒரு நுண்ணிய உணர்வு இவரது கவிதைகளெங்கும் இழையோடிக் கொண்டே வருகிறது. சிதம்பரத்தை வசிப்பிடமாகக் கொண்டு கணினித்துறையில் பணிபுரியும் இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். எதிர்கால கவிதை உலகில் இவருக்கான ஒரு  சிவப்புக் கம்பளம் காத்திருப்பது திண்ணம்.

பொதுவாகவே ஊர்ப்புறங்களில் ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணிற்குத்தான் தெரியுமென்றுச் சொல்வார்கள். அவ்வாக்கைத் தன் அழகான அணிந்துரையால் பொய்ப்பித்திருக்கிறார் இயக்குனர் பிருந்தா சாரதி. அவருக்குப் படைப்புக்குழுமம் தனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறது

எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதை தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி ஆனந்தி ராமக்கிருஷ்னன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

View

உடையாத நீர்க்குமிழி

ஜின்னா அஸ்மி

இரண்டடிச் சித்தாந்தமாம் திருக்குறள் படித்து வளர்ந்த எம் தமிழ்ச்சமூகம் தற்போதைய காலகட்டத்தில் தம்சுயமிழந்து, மதிமறந்து பல்வேறு இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆட்படுவதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். தன் மூதாதையர் வகுத்துச் சென்ற கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்லும் ஓர் இனம் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்ளும் என்றெல்லாம் நான்கு சுவர்களுக்குள் புழுங்கி எழுதிக்கிடந்த தோழர்களை "உடையாத நீர்க்குமிழி" என்ற வீதிக்களம் அமைத்து எழுதக்கேட்டது படைப்புக்குழுமம். அதன்   முத்தாய்ப்பான கவிதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில் உங்களின் கைகளில் விரவிக் கொண்டிருக்கும் உடையாத நீர்க்குமிழி.

இதனை கங்காபுத்திரன் நினைவு பரிசுப்போட்டியென அறிவித்து அதற்கு மொத்தப் பரிசில் தொகையையும் வழங்கிய எம் படைப்புக் குழுமத்தின் மூத்த உறுப்பினர் திரு. கருணாநிதி ஷண்முகம் அவர்களுக்கும் மேலும் இவருடன் கைக்கோர்த்து தமிழ் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகத்தரத்திற்கு உயர்த்திய திரு.ஜோசப் ஜூலியஸ் அவர்களுக்கும் , செம்மையாய் நடுவர் பணியேற்று தன் அழகுத் தமிழில் அணிந்துரை தந்த கவிஞர். திரு. சினேகன் அவர்களுக்கும் படைப்புக் குழுமம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை இச்சமயத்தில் உரித்தாக்கிக் கொள்கிறது.

படைப்பு குழுமத்தின் சொந்த பதிப்பாக வெளிவரும் நூல் இது.  எமது பதிப்பகத்தின் மூலமாக தமது கவிதைகளை வெளியிட சம்மதம் தெரிவித்த குழும உறுப்பினர்கள் அனைவருக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும்,  மெய்ப்புத்  திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய  அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

View

Showing 141 - 154 of 154 ( for page 8 )