நூல் பெயர் : உயிர் நன்று சாதல் இனிது
(கவிதை)
ஆசிரியர் : கரிகாலன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 132
வடிவமைப்பு : மாஸ், விருத்தாசலம்
அட்டைப்படம் : பழனிவேல் மாசு
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ120
தமிழ் கவிதைச் சூழலில் தனித்துவமான மொழியும் உள்ளடக்கமும் கூடியவை கவிஞர் கரிகாலனின் கவிதைகள். கால்நூற்றாண்டு கால கவிதை அனுபவமுடையவர். புகைப்பட மனிதர்கள், அப்போதிருந்த இடைவெளியில், புலன் வேட்டை, தேவதூதர்களின் காலடிச்சத்தம், ஆறாவது நிலம், அபத்தங்களின் சிம்பொனி, பாம்பாட்டி தேசம், மெய்ந்நிகர் கனவு, தாமரை மழை, செயலிகளின் காலம் என பத்து கவிதை நூல்களை தமிழ்க் கவிதைப் புலத்துக்கு அளித்திருப்பவர். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கவிதைகள் கரிகாலன் கவிதைகள் எனும் நூலாகவும் வெளியாகியிருக்கிறது. பல்வேறு கவிதைத் தொகை நூல்களிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. காதலும் அரசியலும் நிரம்பிய பாடுபொருள்களோடு வருகிறது இவரது உயிர் நன்று, சாதல் இனிது தொகுப்பு. எதையும் எளிமையாகவும் அதேவேளை நவீன மோஸ்தருடனும் கலந்து கவிதையாக்குவதுதான் கவிஞரின் திறமை. வெடிப்புற பேசுதல் அவரது கலக குணமாகவும் கவிதை குணமாகவும் அமைந்திருப்பது சிறப்பு. கவிதைகள் எழுதுவதோடு சமகால கவிதைப் போக்கையும் அவதானிப்பவராக திகழ்கிறார். தொடர்ந்து வரும் இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் மனோபாவம் உடையவர். குறிப்பாக இந்தக் கவிதைகள் லாக் - டவுன் காலத்தின் அரசியலையும், கதவடைப்பு காலத்தின் பண்பாட்டையும், வெளிப்படுத்துபவையாக அமைந்திருக்கின்றன.
கவிஞரின் இக்கவிதைகள் வெகுமக்களுக்கான அரசியலை, வாழ்வியலை துலக்குமுறச் செய்கின்றன. அவ்வகையில் இலக்கிய வாசிப்பைக் கடந்து, பரந்துபட்ட தமிழக மக்களின் கவனத்தைக் கோருவதாகவும் இக்கவிதைத் தொகுப்பின் உள்ளடக்கம் உள்ளது. கவிஞரின் 11 வது நூலான உயிர் நன்று, சாதல் இனிது கவிதைத் தொகுப்பை வெளியிடுவதில் படைப்பு பதிப்பகம் பெருமிதம் அடைகிறது.