நூல் : கண்ணாடி வெளி
நூல் வகைமை : கட்டுரைகள்
ஆசிரியர் :
பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 254
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 250
கூர்ந்த அவதானிப்பும் மனவெழுச்சியின் தீர்க்கமும் கொண்டு
எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. நா. பிச்சமூர்த்தி கு. பா ராஜகோபாலன், நகுலன்,
பிரமிள் தேவதச்சன், தேவதேவன் துவங்கி சமகால கவிஞர்கள் வரைக்குமான ஒரு தொடர்
அறுந்த பிறந்த வரிசையில் பலருடையதுமான வேறுபட்ட கவிதை உலகத்தை போதை மிக்க அகமொழியில்
இக்கட்டுரைகள் தொழாவி அடைகின்றன. கவிதையை அக அனுபவமாக அணுகும்போதே அதை அரசியல் பொருண்மையோடு
அனுபவமாக்கிக் கொள்ளும் மன லயத்தில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் பெண் உடல் அரசியல்
தலித் அரசியல் வகையிலான பார்வைகளுடன் விளிம்பு நிலை அறிதல்களும் ஆழ பொதிந்துள்ளன.
ஒரு நூற்றாண்டு தமிழ் கவிதைகளின் வேறுவேறான போக்குகளை இக்கட்டுரைகள் கவித்துவ மனநிலையில் அணுகி ஆராய்கின்றன. கவிதை உரையாடலுக்கு வெளியே கோணங்கியின் புனை கதைகள் பற்றிய தனித்துவமான கட்டுரை ஒன்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட கவிஞர்களின் பிரதிகளின் மீது இந்நூல் திறந்த மனதோடு உரையாடுகிறது.
கடந்த இரு தசாப்தற்கும் மேலாக பாலை நிலவனால் எழுதப்பட்ட
இக்கட்டுரைகள் சமகால தமிழ் கவிதை சூழலை கூருணர்வுடன் புரிந்துணர விரும்பும் ஓர் இளம்
வாசகனுக்கு மாபெரும் திறப்பாகிறது.