நம் காலத்துக் கவிதை
விக்ரமாதித்யன்
categories:Magazines , Publications
எழுத்து என்பது மொழியின் ரகசியம். இந்நவீன உலகில் காலத்திற்கு ஏற்ப எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்ததைப் போல எழுத்திலும் நவீனத்துவம் என்பது இயல்பானது. "முட்டைக்கு ஓடு என்பது குறிப்பிட்ட காலம் வரைதேவைப்படுகிறது. ஆனால் அது காலம் முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே ஓடு உடைக்கப்படல் வேண்டும்" என்பதாக பழமையை உடைத்து நவீனம் பிறந்தது. தனிமனித பிரக்ஞையின் வாயிலாக யதார்த்தத்தைக் கைப்பற்ற முனையும் எண்ணங்களை, நம்பிக்கைகளை, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் மைய விழுமியாக இருக்கிறது இன்றைய நவீனம்.