வணக்கம். படைப்பு ‘தகவு’ எண்பத்தாறாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
இவ்இதழில் கவிஞர் பிருந்தா சாரதியுடனான நேர்காணல்
இடம்பெற்றுள்ளது. புத்தகத் திருவிழாக்கள் குறித்து எள்ளல்
தொனியில் எழுதப்பட்டுள்ள ஆண்டன் பெனியின் கட்டுரை, கவிஞர் விக்ரமாதித்யனுக்குச் சிற்றிதழாசிரியர்
குன்றம் மு.இராமரத்நம் எழுதியுள்ள கடிதங்கள், வெற்றி குறித்த மேற்கத்தியக் கருதுகோள்களை
அலசியுள்ள வானவில் வண்ண மின்னல் பகுதி, பாரதியாரின் ஊழிக்கூத்து குறித்த விளக்கக் கட்டுரை,
அருண்பாரதியின் கவிப்பயணம் குறித்துப் பதிவு செய்திருக்கும் மு.முருகேஷின் கட்டுரை
என இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.