logo

படைப்பின் அறக்கட்டளை - Trust

14246  

"படைப்பு சமூகத்தின் இணைப்பு" என்ற இலட்சிய வார்த்தைக்கு இணங்க "இலக்கிய படைப்பு குழுமம்" என்ற அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து சமூகத்தின் பால் தன்னை இணைத்துக்கொண்டது படைப்பு குழுமம்

படைப்புகளை வளர்க்கும் பணியைத் தாண்டி படைப்பாளிகளையும் வளர்க்க வேண்டும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தி நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் சமூக சேவைக்காக தொடங்கப்பட்டதே படைப்பு அறக்கட்டளை.

அறக்கட்டளை மூலம் சமூகத்தில்/வாழ்வாதாரத்தில் பின்தங்கி இருக்கும் படைப்பாளிகளின் இருண்ட வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் படைப்பு பல முன்னெடுப்புகளை செய்ய இருக்கிறது

ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விகற்க உதவி செய்தல் திறமையான கவிஞர்களின் நூல்களை வெளியிட்டு அவர்களை அங்கீகாரம் பெறச்செய்தல். மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உதவிடுதல். நூலகங்களை பாதுகாத்தல் கிராமப்புற நூலகங்களுக்கு நூல்களை இலவசமாக வழங்குதல் மேலும் அந்த நூலகங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து பாமர மக்களுக்கும் வாசிப்பு பழக்கத்தை உருவாக்குதல் தகுதிமிக்கவர்களுக்கு தகுந்த நேரத்தில் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தல்

நலிவடைந்த கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துதல்

இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பணமுடிப்பும் கொடுத்து கவுரவித்தல் படைப்பு பதிப்பகம் மூலம் குறைந்த கட்டணத்தில் நூல்களை அச்சிட்டு உதவுதல் மாணவ மாணவியர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் நூல்களை வழங்குதல்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக உதவிடுதல்

என்பன போன்ற பல முன்னெடுப்புகளை முன்வைத்து இயங்க இருக்கிறது அறக்கட்டளை.

வங்கி விபரம்
A/C NUMBER: 6650568504
A/C NAME: ILAKKIYA PADAIPPU KUZHUMAM
BANK NAME: INDIAN BANK
BRANCH: VILLIVAKKAM, CHENNAI
IFSC CODE: IDIB000V023.
banner
banner
banner
banner
banner
banner