வணக்கம். படைப்பு ‘தகவு’ எண்பத்திநான்காவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
படைப்பு
குழுமம் வருடந்தோறும் நடத்திவரும் அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் பரிசுப்போட்டிக்கான
முடிவுகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன. முதல் மூன்று பரிசு பெற்ற சிறுகதைகள் இதழில்
பிரசுரிக்கப்பட்டுள்ளன.
உலக சினிமா பகுதியில் ‘எ மேன் எஸ்கேப்டு’ திரைப்படம்
அலசப்பட்டுள்ளது. கவிதைக்குள்
கலந்திருக்கும் கதை பகுதியில் கவிஞர் யுகபாரதி குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வானவில் வண்ண மின்னல் பகுதியில் வெற்றி குறித்த எதிர்மறை விளைவுகள் விளக்கி எழுதப்பட்டுள்ளன.
நம் புலப் பெயல் நீர் கட்டுரை வரிசையில் 'காலத்தால் மூத்த
சுயமரியாதைக்காரர்' கட்டுரை இடம்பெற்றுள்ளது. அய்ந்து நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட
அனுபவங்களைக் கொண்ட எள்ளல் கட்டுரை இடம்பெற்றுள்ளது. பாரதி கவிதைகளை முன்வைத்து கவிதா லட்சுமி எழுதும் புதிய தொடர் தொடங்கியுள்ளது.