நூல் பெயர் : அம்மாவின் காதலன் (சிறுகதைகள்)
ஆசிரியர் : அ. முத்துவிஜயன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
142
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 200
மொழி உருவானபோதே கதையும் கதை சொல்வதும் உருவாகியிருக்க கூடும். காரணம் தனக்குள்
இருப்பதை அல்லது நினைப்பதை வெளியே சொல்லும்போதே அது கதையாக உருவெடுத்து விடுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான கதைகள் உருவாகியிருக்கின்றன. ஆரம்பகாலத்தில்
வாய்மொழி கதையாக உருவாகி பின்பு இலக்கியத்திற்குள் வந்ததும் அது இதிகாசம், புராணம்,
புதினம் என வளர்ந்து இன்று நாவல், கதை, சிறுகதை என்று விரிவடைந்திருக்கிறது. ஒரு கதையை
சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் சொன்னால் சிறுகதையாகி விடும். ஒரே இருப்பில் வாசிக்க
முடிவதாலும், ஆரம்பமும் உச்சமும் அதே இருப்பில் நிகழ்ந்து முடிவதாலும் எல்லோரது மனதுக்கும்
நெருக்கமாகி விடுகிறது சிறுகதைகள். அப்படி வாழ்வியலில் நெருக்கமாகிவிட்ட கதைக்களங்களை
எல்லாம் ஒன்றுதிரட்டி சிறுகதைகளாக உருவாக்கப்பட்டிருப்பதே
‘அம்மாவின் காதலன்’ எனும் நூல்.
மதுரையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும்
கொண்ட படைப்பாளி அ.முத்துவிஜயன் அவர்களுக்கு இது, பதிமூன்றாவது நூல். இவரது நான்கு சிறுகதை நூல்கள் படைப்பு பதிப்பகம் மூலமே
வெளிவந்து பலரது கவனம் பெற்றது. இணையத்தில் படைப்பு உட்பட பல தளங்களிலும் இவரது கதைகள்
தேர்வு செய்யப்பட்டு பதிவாகிக் கொண்டிருக்கிறது. படைப்புக் குழுமத்தில் இவர் பதிவிடும்
சிறுகதைகளை சுடச்சுட வாசிக்க ஒரு வாசகர் கூட்டமே காத்திருக்கும். படைப்புக் குழுமத்தால்
வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை கவிதைக்காகவும்
சிறுகதைக்காகவும் இருமுறை பெற்றவர். மேலும் படைப்பின் உயரிய விருதுகளில் ஒன்றான கவிச்சுடர்
விருதும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.