நூல் பெயர் : முழு இரவின் கடைசித் துளி
(கவிதை)
ஆசிரியர் : ப.தனஞ்ஜெயன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 112
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : கமல் காளிதாஸ்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
இரவுகள் எப்போதும் அழகானவை. இரவின் ஒவ்வொரு துளியும் ஒளியால் நிரம்பியது. நம் கண்களைக் கூசச் செய்யாத ஒளி, பரிசுத்தமாக ஒளிர்வதே இரவில்தான். கீழே கிடக்கும் பூமியைப் பார்க்கப் பகல் தேவைப்பட்டாலும் மேலே மிதக்கும் ஆகாயத்தைப் பார்க்க இரவுகள்தான் தேவைப்படுகின்றன. அதனால்தான் சொர்க்கம்கூட மேலே இருப்பதாக நம்பப்படுகிறது. இரவு என்பது போதி மரம், அதை ரசிக்கத் தெரிந்தவருக்கு அது ஞானம் தரும். அப்படிப்பட்ட ரசிப்புமிக்க கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’முழு இரவின் கடைசித்துளி’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எல்லோருக்கும் புரியும்வகையில் மிக எளிய நடையில் இருப்பதும், அது எதார்த்தங்களை வாசிப்பவர் மனதில் விதைத்துவிட்டுப் போவதும் இத்தொகுப்பின் பலம்.
புதுச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ப.தனஞ்ஜெயன் அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இன்றும், முதல் தொகுப்பின் பல கவிதைகள் பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவரது பல கவிதைகள், பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.