நூல் பெயர் : அரிதாரம் பூசிய அர்த்தநாரி (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் : தொகுப்பு சலீம்கான் (சகா)
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
198
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 280
இலக்கிய வரலாற்றின் தொடக்கப் புள்ளி ஒரு கதையிலிருந்து தொடங்கி இருக்கக்கூடும்.
இக்கதைகளின் எளிமையும் சுவாரசியமும், சாமானியர்களையும் இலக்கியத்தின் மேல் பிரியம்
கொள்ளச் செய்துவிடும். எல்லா மனிதர்களின் பால்ய கால வாழ்வும் கதைகளின் கதகதப்பில் தான்
காலம் கடந்திருக்கும். கதை கேட்டு தனது ஆற்றலை வளர்த்துக் கொண்ட எத்தனையோ மகத்தான மனிதர்கள்
இங்கு இருக்கிறார்கள். கதை கேட்பதும் ஒரு ஆற்றல். கதை எழுதுவதும் ஒரு ஆற்றல்.
அப்படிப்பட்ட ஆற்றலை வளர்க்கும்வகையில், ‘அம்மையார் ஹைநூன்பீவி’ நினைவு பரிசுப்
போட்டி வாயிலாக ’படைப்பு சிறுகதைப் போட்டி’ என்ற போட்டிக்களம் அமைத்து எழுதக் கேட்டது,
படைப்புக் குழுமம். சர்வதேச அளவில் நடந்த இப்போட்டியில் பல நாடுகளிலிருந்து பலநூறு
படைப்பாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். போட்டிக்கு வந்த பலநூறு படைப்புகளிலிருந்து
தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில், உங்களின் மனதில் நிறைந்துகொண்டிருக்கும்
இந்த ‘அரிதாரம் பூசிய அர்த்தநாரி’ தொகுப்பு. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு நாற்பதாயிரம்
ரூபாய் பரிசுப் பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.