நீ பிடித்த திமிர்
அகதா
போகிறபோக்கில் புதிதாக ஓரிரு சொற்களை நமக்கே தெரியாமல் நாம் பிரயோகப்படுத்தி விட்டுப்போகும்
பிராயத்திலிருந்து
தொடங்கிவிடுகிறது ஒவ்வொருவருக்குமான முதல் தேடல். அந்த தேடலின் தொடக்கப்புள்ளியிலிருந்து உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களிலும், யாராலும் உணரமுடியாத ஆதிரகசியத்தின் திமிர் ஒளிந்திருக்கும். விழிகளின் ஆலாபனையாக வெளியே தெரியும் இப்படியான சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே "நீ பிடித்த திமிர்" தொகுப்பு. இதில் உள்ள சொற்களை உச்சரிக்கும்போது கவிதையாகிறது, அதையே உணரும்போது காதலாகிறது. "என் பால்யத்தில் நான் கிறுக்கி கொண்ட எழுத்தல்லவா இது " என வாசிப்பவர் எல்லோரும் உள்ளுக்குள் நினைத்து உருகும் நிலைக்கு தள்ளப்படுவதே இத்தொகுப்பின் பலம்.
பெரம்பலூரை வசிப்பிடமாகவும், தமிழ்த்துறை முனைவருமான படைப்பாளி "அகதா" அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவரது முதல் தொகுப்பான "அசோகவனம் செல்லும் கடைசி இரயில்" படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது இவருக்கு. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி என்ற தனித்துவமான விருதும் பெற்றவர்.
நூல்
நீ பிடித்த திமிர்
நூலாசிரியர்
அகதா
நூல் வகைமை
கவிதை
நூல் விலை
120
வெளியீடு
படைப்பு பதிப்பகம்
அட்டைப்படம்
ரவி பேலட்