நூல் பெயர் : பாடலின் பின்குறிப்பு (கட்டுரைகள்)
ஆசிரியர் : ஏகாதசி
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
130
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 190
கவலையை மறக்க,
கஷ்டங்களை மறைக்க, கனவில் மிதக்க, நினைவில் கதைக்க, காதலில் துடிக்க, கண்ணீரைத் துடைக்க, இன்பத்தை திறக்க, துன்பத்தை துறக்கஞ் இவ்வளவு ஏன்?
கணப்பொழுதேனும் தற்கொலையைத் தள்ளி வைக்க என்று நமக்குப் பிடித்த ஒரேயொரு பாடல் போதும்
மனதை லேசாக வைத்திருக்க. ஒரு பாடலைக் கேட்கும்பொழுது நமக்குள் உண்டாகும் சந்தோஷம் நிம்மதியைத்
தாண்டி அப்பாடலுக்குப் பின்னால் உள்ள குறிப்புகள் பல சுவாரஸ்யங்களைத் தன்னுள் ஒளித்து
வைத்திருக்கும். அப்படிப்பட்ட பாடல்களின் பின்குறிப்புகளையும், அப்பாடல் பிறந்த கதையின்
பயணத்தையும் ஒன்றுதிரட்டி ஆவணப்படுத்தியிருப்பதே “பாடலின் பின்குறிப்பு” நூல். இவை திரைப்டப் பாடல்கள் பற்றிய பின்
குறிப்பு அல்ல. தனி இசைப் பாடல்களின் பின் குறிப்பு. இது கண்ணீரும் புன்னகையும் கலந்த,
வெக்கை மிகுந்த மனித வாழ்வின் குறுக்கு விசாரணை. தனியிசையாக வெளிவந்து மக்கள் மனங்களில்
வாழும் அழியாப் பாடல்களின் உருவாக்கத் தடங்கள்.
மதுரை மாவட்டம் பணியான் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும்,
சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி ஏகாதசி அவர்களுக்கு இது பதினாறாம் நூல். இயக்குநர்,
பாடலாசிரியர், கவிஞர் என பல முகங்களைக் கொண்டவர் இவர். மூன்று திரைப்படங்களை இயக்கியதுடன்
300க்கும் மேற்பட்ட திரையிசை பாடல்களையும் 500க்கும் மேற்பட்ட தனி இசை பாடல்களையும்
எழுதியுள்ளார். இவரது சிறுகதை ஒன்று கல்லூரியில் பாடமாக உள்ளது. மேலும் இவரது சில நூல்களை பல மாணவர்கள் ஆய்வுக்காக எடுத்துள்ளார்கள்.
புரட்சிக் கவிஞர் விருது, கவிப்பித்தன் விருது, கு.சி.பா அறக்கட்டளை வருது. தமுஎகச
விருது, க்ஷி4 விருது உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.