நூல் : அன்பார்ந்த தமிழீழமக்களே!
நூல் வகைமை : நாவல்
ஆசிரியர் : ச. இராகவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 114
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 200
போர் வன்முறையின் ஆறாத் தழும்புகளை ரத்தமும் சதையுமாக வைக்கும் இக்கதை நான்
லீனியர் வகை இடத்தில் வேறு பல உள் கதைகளின் மடிப்புகளுடன் இலங்கைத் தமிழர்களின் பேச்சு
வழக்கில் வெகு சரளமாக பிறழ் தன்மையில் எழுதப்பட்டுள்ளது. அந்த உள் கதைகள் பாலியல் சுரண்டல்
அதிகாரம் கண்காணிப்பு என்று பேசும்போதே அறம் சித்ரவதை நீதி என்கிற வகைகளில் எழுதப்படுகிற
கதைகளிலிருந்து கொடூரம் வலி வாதை என்கிற குணங்களை வாழ்வின் கடும் நெருக்கடியிலிருந்து
எடுத்துக் கொண்டு வந்துள்ளது.
இந்த நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான கதைகளிலிருந்து
பெருமளவில் சவாலான வடிவ சோதனையில் தீவிரப்பட்டுள்ள இந்நாவல் யுத்த ரத்த வெறியை அறத்தின்
பக்கம் நிறுத்தி தோலுரித்து உப்புக் கண்டம் இட்டுள்ளது.