நூல் பெயர் :
எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை
நூல் வகைமை :
கவிதைகள்
ஆசிரியர் : பாலை நிலவன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 168
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ .250
மொழியின் அனைத்து சாத்தியங்களின் மீதும் பெருவிருப்பங்கொண்ட
கவிஞன் கனவின் பெரும்பறவையாகவும் இருக்கிறான். கவிஞன் எரியும் காலத்தில் ஞாபகமாக அலையும்
ஒரு பூனையாக ஏன் இருக்கிறானென்றால் அவன் தன் மனித உடலின் பௌதிக தன்மையில் இருந்து பல
போதும் வெளியேறிவிட்ட அபூர்வ பிராணியாக இருக்கிறான். மொழியின் திசைமீது அலையும் ஒரு
கவித்துவப் பிராணி எரியும் நூலகத்தின் மீது மாபெரும் திகைப்பில் நடந்து செல்கிறது.