நூல் பெயர் : நீர் பருகும் தாகங்கள் (தமிழக அரசின் விருதுபெற்ற நாவல்)
ஆசிரியர் : காதம்பரி
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
290
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 400
மரபுவழிவந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுவரும் பெண் பற்றிய போலியான கருத்துருவாக்கங்களை
உடைத்தெறிவதும், பெண் அடக்குமுறைகளின் பல வடிவங்களை வெளிக்கொணர்வதும், பாலியல்
மற்றும் பாலினம் ஆகியவற்றை மையப்படுத்தி, அதிகார உறவுகளையும் ஆதிக்க மனப்பான்மைகளையும்
எடுத்துக்காட்டுவதும், சமூகவியல், வரலாற்றியல், உளவியல், மார்க்சியம், அமைப்பியல்,
வாழ்வியல் போன்ற கோட்பாடுகளோடு கருத்து நிலைகளில் நெருக்கம் கொண்டிருபதுமே பெண்ணியம்.
உளவியல் பகுப்பாய்வு முறையில் பெண்ணியத்தை விளக்கி, பெண்ணின் சுயமான விருப்பங்கள்,
உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், இவற்றின் முறிவுகள், சிதைவுகள் முதலியவற்றை அவை
ஏற்புடைய சூழ்நிலைகளுடன் குறியீடுகளாகவோ, படிமங்களாகவோ இச்சமூகத்தில் வெளிப்படுத்த
இலக்கியமே சிறந்த வடிவம் இவ்வுலகில். அப்ப்டி பெண்களின் உணர்வுகளைப் பற்றி பெண்ணியப்
பார்வையில் எழுதப்பட்ட நாவலே “நீர் பருகும் தாகங்கள்” நூல்.
ராஜபாளையத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி காதம்பரி அவர்களுக்கு
இது எட்டாவது நூல். இவருடைய நிரல்மொழி என்ற நாவல் படைப்பு பதிகம் மூலமாகவே வெளியிடப்பட்டு
பலரது கவனம் பெற்றது. இப்பொழுது சுவீடன் நாட்டில் வசிக்கும் இவர், இன்றைய இலக்கிய உலகிலும் சமூக வலைத்தளங்களிலும்
தன் படைப்புகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். மேலும் உலக பெண் கவிஞர் பேரவை மற்றும் புதுச்சேரி ஒருதுளி
கவிதை இணைந்து நடத்திய இணைய வழி பன்னாட்டு கவியரங்கத்தில் பங்கேற்று, கவிதை வாசித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.