நூல் பெயர் : திரையும் வாழ்வும் (பாகம் - 2)
(சினிமா கட்டுரை)
ஆசிரியர் : கரிகாலன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 154
வடிவமைப்பு : மாஸ், விருத்தாசலம்
அட்டைப்படம் : பழனிவேல் மாசு
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ150
ஒரு சினிமா பார்ப்பதில் இத்தனை விசயங்களா? என வியக்க வைக்கிற அனுபவத்தை தருகிற நூல் திரையும் வாழ்வும். சமகால உலக சினிமாக்களை அருகருகே வைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பு. பல மொழி படங்கள் குறித்த கவிஞரின் பார்வை பன்மைத்துவ கலாச்சாரத்தை, வாழ்வியலை விளங்கிக் கொள்ள உதவுகிறது. வாழ்விலிருந்துதான் கலை பிறக்கிறது, என்றபோதும் அவ்வாழ்வை செம்மைப் படுத்துவதாகவும் கலையின் பணியாக எருக்கிறது. இன அழிப்பு, போர், பாலியல் வன்முறை, சாதி, மத பாகுபாடு நிறைந்த மதிப்பீடுகள் மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்த வாழ்வுக்கு இடையூறாக இருக்கின்றன. இக்காரணிகளை சினிமாவின் வழி இனம் காணவும், விடுதலையடையவுமான வெளிச்சத்தைத் தருகிற நூல் இது.
சமீபத்தில மறைந்த சினிமா பிதாமகர் கிம்கிடெக் முதல், சமகால இளைஞர்களின் மனம் கவர்ந்த பின் நவீனத்துவ திரை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் வரையிலான இயக்குநர்களின் படங்கள் குறித்த காத்திரமான அபிப்ராயங்களை உருவாக்குகிறது திரையும் வாழ்வும். கவிஞராக, சங்க இலக்கியங்களை சமகால மொழியில் உரையாடுபவராக கரிகாலன் நூல்களை வெளியிட்டுள்ள படைப்பு பதிப்பகம், அவரது திரை பரிமாணத்தையும் இந்நூல் மூலம் வெளிக்கொணர்வதில் பெருமிதம் அடைகிறது. ஓடிடி தளங்கள் மூலம் இளைஞர்கள் உலகத் திரைப்பட பார்வையாளர்களாக பரிணமிக்கும் நிலையில், அவர்களுக்கு சிறந்த தெரிவுகளையும், மேலான பார்வைகளையும் வழங்கும் இந்நூலை, வாசகர்களுக்கு அளிப்பதில் மகிழ்வடைகிறோம்