நூல் பெயர் :
உயிர் போகிறது கொஞ்சம் காதல் கொண்டு வா
(கவிதைகள்)
ஆசிரியர் :
மு.ரகுபதி
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
108
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 150
காதல் என்பது ஒரு பண்பு, அது ஒரு செயல் அல்ல. காதல்
என்பது ஒரு கனவு அல்ல, அது ஏதோ ஒன்றினுள் பிரவேசிக்கின்ற ஒரு உணர்வு. ஏதோ ஒன்று உங்களை
வெற்றி கொள்வதற்கு நீங்களே அனுமதிப்பதும் அல்லது ஏதோ ஒன்றிடம் நீங்கள் தோற்றுக் கொள்ள
சம்மதிப்பதும் காதலே. அதுவே பரிபூரனம் அதுவே புதிய பரிமாணம். காதலென்பது உருவாக்குவதல்ல
வளர்ப்பது. உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், கால் பதிக்கும் இந்த
மண், அனைத்தையும் பார்க்கும் ஆகாயம் என எல்லாமே
காதலால் நிரம்பியிருக்கிறது. இயற்கையிடம் பெற்றதை இயற்கை எய்தும்வரை கொடுப்பதே காதல்.
வெறுப்பை புறந்தள்ளி பிறப்பை நேசிப்பதும், இறப்பை புறந்தள்ளி இருப்பை யோசிப்பதும் காதல்தான்.
இப்படிப்பட்ட பிரியங்களின் ரகசியங்களை இலக்கியத்திற்குள் கொண்டுவந்து குறுங்கவிதைகளாக்கி
இருப்பதே ‘உயிர் போகிறது கொஞ்சம் காதல் கொண்டு வா’ எனும் இந்நூல்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் எனும் ஊரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மு.ரகுபதி அவர்களுக்கு இது இரண்டாம் நூல். இவரது முதல் நூல் படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிட்டு பலரது கவனம் பெற்றது. தமிழ் நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையில் ஆர்வமிகுந்த இவர் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசுகளும் பதக்கங்களும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.