நூல் பெயர் : நோம் என் நெஞ்சே
(கட்டுரை)
ஆசிரியர் : கரிகாலன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 153
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான், மா.சு.பழனிவேல்
அட்டைப்படம் : ரவி பேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ150
சங்ககாலப் பெண்கவிஞர்கள் குறித்த குறிப்புகளையும், அவர்தம் கவிதைகள் குறித்த உரையாடலையும், உள்ளடக்கியிருக்கிற நூல்தான் “நோம் என் நெஞ்சே”. சங்ககால சமூகத்தின் பெண் இருப்பை, சமகால பெண்ணிய சிந்தனை வெளிச்சத்தில் வைத்து, விளங்கிக் கொள்கிற சாத்தியத்தை வழங்கும் நூலாக இது திகழ்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட நம் சங்கத்தமிழ் பெண் உறவுகளை, அருகருகே வாசிக்கும் நல்வாய்ப்பை “நோம் என் நெஞ்சே” நமக்களிக்கிறது. குறிப்பாக கல்விப் புலத்துக்கு உதவக்கூடிய தரவுகள் இந்நூலெங்கும் விரவிக்கிடக்கிறது. சங்க இலக்கியத்தை, வழக்கம்போல, எளியோர்களின் நூலகங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார் கரிகாலன். சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் சங்ககால பெண்பாற் புலவர்கள் - வாழ்வும், எழுத்தும் குறித்து மிக எளிமையாக, எதார்த்தமாக சொல்லி இருப்பது இந்நூலின் பலம்.
கடலூர் மாவட்டம் மருங்கூரைப் பிறப்பிடமாகவும், விருதாலசலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி கரிகாலன் அவர்களுக்கு இது பதினேழாவது தொகுப்பு. சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் ஆசிரியர் பணியோடு இன்றும் எழுதி வருகிறார். இதுவரை வெளியான இவரது மற்ற தொகுப்புகள் வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.