வாழ்வெனும்
முழுமைக் கட்டத்தில் உருவான கலை மற்றும் சிந்தனைப் போக்கு இலக்கியமாக மாறியது. இக்கால
நவீனமயமாதலின் இயல்புகளைக் கூட அதிகம் கவனிக்க கூடியதாய் மாற்றியது இலக்கியமே. அறிவியல்,
அரசியல், மருத்துவம், தொழில்நுட்பம், வரலாறு, உளவியல் போன்ற எண்ணற்ற
துறைகள் விஞ்ஞானத்தால் ஆக்கபூர்வமான வளர்ச்சிகள் அடைந்தாலும் வாழ்வியல் எனும் வளர்ச்சி, இலக்கியத்தால் மட்டுமே
முடியும் என்பதே நிதர்சனம். இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்றவாறு இலக்கியமும் நவீனத்துவத்தைத்
தனக்குள் தகவமைத்துக் கொண்டது. நவீனத்துவத் தன்மை கொண்ட இலக்கியம் வலுவான மையக்கரு
கொண்டதாக இருக்கும். அக்கருவை தர்க்கபூர்வமாக நிறுவ முயலும். அதே போல தெளிவான,
செறிவான, ஒருங்கிணைவுள்ள வடிவம்
கொண்டதாக இருக்கும். அதற்கேற்ற நுண்மையும்,
கவனமும்
கொண்ட மொழி கொண்டிருக்கும். இப்படிப்பட்ட செறிவான வரிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
'நீயே முளைப்பாய்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனத்தில் 'ஒரு கனவை நாம் மட்டும்
கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது
நிஜமாகும்" என்ற நம்பிக்கை விதைக்கும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
இராஜபாளையத்தைப்
பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கவிதா ஜவகர் அவர்களுக்கு இது முதல்
நூல். இவருடைய படைப்புகள் பல பிரபல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. பட்டிமன்ற
பேச்சாளர் என்ற தனித்த அடையாளத்தோடு வலம் வரும் இவர், கடந்த 22 ஆண்டுகளில் 2500க்கும் மேலான பட்டிமன்றங்களில்
பேசியிருக்கிறார். மேலும் தனது பட்டிமன்றப் பேச்சின் எண்ணிக்கை ஆயிரம் கடந்த போது 'பேசும் பூங்காற்று' என்ற தனித்துவமான
அங்கீகாரத்தையும்,
பட்டத்தையும்
தினத்தந்தி நாளிதழ் மூலம் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.