இசைக்கும் வயலினுக்குக் குருதியின் நிறம்
நூல் பெயர் : இசைக்கும் வயலினுக்குக் குருதியின் நிறம்
(கவிதைகள் )
ஆசிரியர் : வலங்கைமான் நூர்தீன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 86
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
தொடுதலில் தொடங்கி தொடுதலில் முடியும் அதிசயமே இசை. கருவிகளைத் தொட்டு செவிகளைத் தொடும் உலகப் பொதுமொழியான இசை, கடைசியில் இதயத்தைத் தொடும்போதுதான் சரீரம் சங்கீதத்தில் சங்கமிக்கிறது. ஒரு சத்தம், ஒலி, சலசலப்பு, இரைச்சல், ரீங்காரம் என அசைவின் மொழியாக இசை இருக்கிறது. ஒளியை ஏற்கும் கண்களில் வெளிச்சம் பிறக்கிறது ஒலியை ஏற்கும் மூளையில் ஞானம் பிறக்கிறது. மேலிருந்து கீழாகக் கலையும், கீழிருந்து மேலாகக் கவிதையும் கலக்கின்றன. இதற்கு இடையில்தான் மொத்த வாழ்வும் இருக்கிறது. இசையென்பது இசைக்கப்பட்ட கவிதை, கவிதையென்பது எழுதப்பட்ட இசை. மனதுக்குள் எழுந்து மௌனத்தில் ஒளிரும் சொற்களை மாயவிசை கொண்டு நவீன எழுத்துகளாக மாற்றி இருப்பதே ‘இசைக்கும் வயலினுக்குக் குருதியின் நிறம்’ எனும் நூல். நவீனத்தைக் கையாளும் விதமும் அதை நேர்த்தியாக வாசிப்பவர்களுக்கு பரிமாறும் முறையும் இந்நூலின் மிகப்பெரும் பலம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி வலங்கைமான் நூர்தீன் அவர்களுக்கு இது மூன்றாம் நூல். இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிகை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். படைப்பு குழுமத்தின் கலை இலக்கிய திங்களிதழான ‘தகவு’ இதழின் தலைமை நிருபராகவும் இருக்கிறார். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் தனித்துவமான உயரிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.