நூல் பெயர் : கெணத்து வெயிலு
(கவிதை)
ஆசிரியர் : காதலாரா
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 134
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
பொதுவாக, கிணற்றில் என்ன இருக்கும்? தண்ணீர் இருக்கும். இல்லையெனில் வறண்டு கிடக்கும். இதைத்தவிர வேறு என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது என எளிதாகக் கடந்துவிட முடியாது. அதனுள்தான் ஆழம் இருக்கிறது. எட்டிப் பார்க்கும்போது தண்ணீர் தெரிகிறது, நாம் அதைப் பார்க்கிறோம். நாமும்தானே தெரிகிறோம். நம்மை யார் பார்ப்பது என்பதே கிணற்றின் ஆச்சர்யம். எட்டிப் பார்க்கிறோம் என்பதைவிட எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் எல்லாமும் இருக்கிறது என்பதை கற்றுக்கொடுப்பதே கிணறுதான். எளிமையில்தான் எல்லா ஆச்சரியங்களும் மூழ்கிக் கிடக்கிறது என்பதற்கு கிணறே சாட்சி. அப்படிப்பட்ட எதார்த்தங்களின் சாட்சியங்களையெல்லாம் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’கெணத்து வெயிலு’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எல்லோருக்கும் புரியும்வகையில் மிக எளிய நடையில் இருப்பதும், அது எதார்த்தங்களை வாசிப்பவர் மனதில் விதைத்துவிட்டுப் போவதும் இத்தொகுப்பின் பலம்.
தருமபுரி மாவட்டம், கெட்டுப்பட்டியை பிறப்பிடமாகக் கொண்ட படைப்பாளி ’காதலாரா’ அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவரது கவிதைகள், பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.