நூல் பெயர் : ஆ காட்டு
(கவிதை)
ஆசிரியர் : மு.முபாரக்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 96
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
எல்லாப் படைப்புகளின் தொடக்கப்புள்ளியும் ஏதோவொரு கருவிலிருந்தே உருவாகிறது. அது, உயிரற்ற படைப்புகளுக்குக் கருவாகவும், உயிருள்ள படைப்புகளுக்குக் கருவறையாகவும் பரிணமிக்கிறது. கருவையே கருவறையில் வைத்துச் சுமக்கும் பேராற்றல் படைத்தவள் தாய். ஓர் உயிர், தனது வாழ்நாளில் எத்தனையோ பயணங்களைத் தொடங்கினாலும் தனது தாயின் ஸ்பரிசத்தில் முதன்முதலில் ஆகாரத்திற்காக ’ஆ காட்ட’ தொடங்கும் பயணமே அவ்வுயிரின் ஆதித் தொடக்கமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒப்பற்ற தொடக்கப்புள்ளிகளின் வாழ்வியலையெல்லாம் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘ஆ காட்டு’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரை தாமே எழுதியதைப்போல உணரவைப்பதுடன், காட்சிக்கேற்றவாறு அந்தந்தச் சூழலை அசைபோடவைக்கும். எளிமையாக இருப்பதும் எல்லோருக்கும் எளிதில் புரியும்வகையில் இருப்பதும் இத் தொகுப்பின் பலம்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி மு.முபாரக் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவர், சமூக வலைதளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் தன் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். கவிஞர் மு.மேத்தா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசுபெற்றவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் மற்றும் படைப்பு பரிசுப் போட்டியில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.