logo

நெடுநல் இரவு


நூல் பெயர்    :  நெடுநல் இரவு
                      (கவிதைகள் )

ஆசிரியர்    :  மௌனன் யாத்ரிகா

பதிப்பு            :  முதற்பதிப்பு 2020

பக்கங்கள்    :  100

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு டிசைன் டீம் 

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 120
மழைப் பேச்சைக் கேட்கும் பூமிக்கு, ஈரம் கசியும் இதயம் இருக்கத்தானே செய்யும் என்பதைப்போலவே இலக்கியமும் இரவும். இரவுக்கும் இலக்கியத்திற்கும் எண்ணிலடங்கா ஒற்றுமை இருக்கிறது. இரவை, ஒளிமயமான இருள் என்றும் வெளிச்சம் உறங்கும் நேரம் என்றும் இலக்கியத்தைத் தவிர வேறு எதனால் இவ்வளவு அழகாகச் சொல்லிவிடமுடியும். இலக்கியத்தைப் போலவே இரவுக்கும் தெரியும் எதை, எங்கு, எப்படிச் சொல்லவேண்டும் என்று. அதனால்தான் பெரிதாக இருக்கும் விண்மீன்களை சிறியதாகவும், சிறியதாக இருக்கும் நிலவைப் பெரிதாகவும் காட்டிக்கொண்டிருக்கிறது. பகலென்பது வெறும் வெளிச்சமல்ல; அது இரவின் படிமம். இருள் என்பது அதன் குறியீடு.பிரமாண்டம் எப்போதும் அமைதியாகவே இருக்கும் என்பதற்கு இரவே சாட்சி. உலகத்தின் முதலும் கடைசியும் இரவாகவோ, இருளாகவோ மட்டுமே இருக்கமுடியும். அந்த அத்தாட்சியின் நீட்சியே கருவறையும் கல்லறையும். அப்படிப்பட்ட பிரமாண்டங்களை எல்லாம் கவிதை இரவுகளாக ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘நெடுநல் இரவு’ நூல். படிமம், குறியீடு என பரந்துபட்ட நவீனத்தை, எளிய நடையில் எல்லோருக்கும் புரியும்வகையில் சொல்லியிருப்பது இந்நூலின் பலம்.

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் படைப்பாளி மௌனன் யாத்ரிகா அவர்களுக்கு இது, ஏழாவது நூல். இவர், இன்றைய இலக்கிய உலகிலும் பத்திரிக்கை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். உயிர்மை சுஜாதா விருது, வாசகசாலை விருது, தாழ்வாரம் நவீன இலக்கியக் களம் விருது போன்ற எண்ணற்ற விருதுகள் பெற்றிருக்கிறார். மேலும் படைப்புக் குழுமத்தால் நடத்தப்பட்ட பரிசுப் போட்டியில், கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களால் முதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பதும், குமுதம் இதழ் நடத்திய சங்க இலக்கிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

அகத்தொற்று


0   806   0  
June 2021

சிற்றில்


0   699   0  
October 2022