வேர்த்திரள்
சகா
எல்லா உயிர்களுக்குமான ஆதித்தாய் காடு. அதில் வாழும் உயிர்களுக்கு நீராதாரம் மழை. மழை இல்லையென்றால் காடு இல்லை அதேபோல காடு இல்லையென்றாலும் மழை இல்லை. அப்படி ஒரே கருவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளாக இருக்கும் மழையையும் காடுகளையும் பற்றி "மழைக்கு ஒதுங்கிய வானம்" என்ற தலைப்பின் கீழ் கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டிக்காகவும், "வேர்த்திரள்" என்ற தலைப்பின் கீழ் 'அம்மையார் ஹைநூன்பீவி' நினைவு பரிசுப்போட்டிக்காகவும், போட்டிக்களம் அமைத்து எழுதக்கேட்டது படைப்புக்குழுமம். அதன் முத்தாய்ப்பான கவிதைகளின் தொகுப்பே இந்தக் கணத்தில் உங்களின் மனதில் நிறைந்துகொண்டிருக்கும் இந்த வேர்த்திரள் தொகுப்பு. இப்போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் பரிசுப்பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த இரு போட்டிகளுக்கும் வந்திருந்த ஆயிரக்கணக்கான சிறந்த கவிதைகளினின்றும் மிகச்சிறந்த கவிதைகளைப் பரிசிலுக்காகத் தேர்வு செய்தும் சற்றும் சலிப்புறாது இத்தொகுப்பிற்கான வாழ்த்துரை வழங்கியும் நம்மைப் பெருமைப்படுத்திய கவிஞர். விக்ரமாதித்யன் மற்றும் கவிஞர் வண்ணதாசன் அவர்களுக்குப் படைப்புக் குழுமம் தன் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது.
நம் காலத்துக் கவிதை
விக்ரமாதித்யன்
கட்டுரை
150
படைப்பு பதிப்பகம்
ஓவியர். ரவி பேலட்