நூல் பெயர் : ஹைக்கூ தூண்டிலில் ஜென் – II (கட்டுரைகள்)
ஆசிரியர் :
கோ.லீலா
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
218
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 300
தவளையைப் பாட்டுப் பறவை என்று செல்லமாக அழைக்கும் ஜப்பானிலிருந்து கருவான ஹைக்கூ,
சங்கம் வைத்து மொழி வளர்த்த தமிழிடமும், வந்தாரை வாழ வைக்கும் தமிழரிடமும் துளிப்பாக்களாக
உருவானது. மூன்று வரிகளில் முடிந்து விடும் ஹைக்கூவை முப்பரிமாண ஒளிப்படவியலாய் பிரதிபலிக்கச்
செய்தது தமிழ்தான். முப்பரிமாண ஒளிப்படவியல் (holography) என்பது ஒன்றின் முப்பரிமாண
ஒளிப்படத்தை சேமித்து இன்னொரு இடத்துக்கு பரிமாறக்கூடிய தொழில்நுட்பமாகும். ஒரு பொருளின்
அனைத்து பரிமாணங்களையும் பிரதிசெய்து அப்பொருளை நேரடியாக பார்ப்பதற்கு இணையாக ஒவ்வொரு
கோணத்திலும் அதன் தோற்றத்தை தோற்றுவிப்பதேயாகும்.
ஜென் (zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்ட
ஜப்பானிய ஹைக்கூவை ஆன்மத் தளத்திலிருந்து அறிவுத் தளத்திற்கு மாற்றியதே தமிழ் கவிஞர்கள்தான்.
அப்படி தனித்துவமாக எழுதப்பட்ட கவிஞர் பிருந்தா சாரதியின் ஹைக்கூவை ஆய்வு செய்து, மூன்று
வரிகளில் ஒளிந்திருக்கும் துளிப்பாக்களின் தூரிகைகளை முப்பரிமாண ஒளிப்படவியலாய் பிரதிபலிக்கச்
செய்து விரிவான தகவல்களுடன் படைப்பாளி கோ.லீலா அவர்களால் பதினாறு கட்டுரைகளாக விளக்கப்பட்டிருப்பதே
‘ஹைக்கூ தூண்டிலில் ஜென்-2’ தொகுப்பு. எல்லோரும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் ஹைக்கூ
மற்றும் ஜென் பற்றிய தேடலுக்கு வழிகாட்டியாக இருப்பதும், இதன் முதல் பாகம் வெளியாகி
பலரது கவனத்தைப் பெற்றதும் இந்நூலின் பலம்.
மேலும் இரண்டு பாகங்களிலும் சேர்த்து, மாஸ்டர்களின், ஹைக்கூவில், சுமார் நூறு
ஹைக்கூவை மொழியாக்கமும் செய்துள்ளார்.
திருக்குவளையை
பூர்வீகமாகவும், தஞ்சையை வாழ்விடமாகவும், பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழ்நாடு
அரசு நீர்வளத் துறையில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் படைப்பாளி கோ.லீலா அவர்களுக்கு
இது, ஒன்பதாவது நூல். இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல பிரபல பத்திரிகைகள், இதழ்களில்
பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த
படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், படைப்பின் உயரிய விருதான இலக்கியச்சுடர்
விருதையும் பெற்றவர். படைப்பு பதிப்பகம் வெளியிட்ட இவரது முதல் நூலான ‘மறைநீர்’, எண்ணற்ற
விருதுகளைப் பெற்றிருப்பதுடன் கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த பத்து நூல்களில்
ஒன்றாக இந்நூலை, விகடன் தேர்வு செய்து பெருமைப்படுத்தியதும், இந்நூலின் நான்காவது கட்டுரை
Bishop Heber College Trichy. B. A., Tamil literature Part 1 Syllabus ஆக சேர்க்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது கட்டுரை Part of BA Tamil language & literature (Honours) at
University of Calicut லும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.