நூல் பெயர் : வியாழக்கிழமையைத் தொலைத்தவன்
நூல் வகைமை : கவிதைகள்
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள் :
84
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 120
சுய
அடையாளம், சுயமறியாதை, சுய கட்டுப்பாடு மற்றும் சுய முன்னேற்றம் உட்பட எல்லாவற்றையும்
கடந்து தெளிந்த மனமே கவிதை மனம். மூளை சிந்திக்கும் அறிவியல் புதிர்களை மனம் ஒத்துப்போகும்
வாழ்வியல் புரிதலுடன் உளவியல் ரீதியாக இருப்பதை எல்லாம் சுவாரஸ்யமான இலக்கிய ரீதியாக மாற்றுவதே கவிதைகள். கவிதையில்
பிரசவிக்கும் சொற்கள் என்பது உடல் இருப்பை மீறும் ஒரு அழியாத ஆன்மா. அது எதிர்மறை ஈர்ப்பு மையம் வட்டதிற்குள் சிக்காமல்
எல்லா எல்லைகளையும் தகர்த்து அர்த்தமற்ற சொற்கூட்டை அர்த்தமுள்ள தத்துவமாக மாற்றுகிறது.
அந்த தத்துவம், உள்ளார்ந்த மற்றும் கற்றறிந்த காரணிகளை மட்டுமல்ல, சூழ்நிலைகளையும்
சார்ந்து சமூகத்தில் எதிரொலிக்கும்போது யாவருக்குமான இலக்கியமாகிறது. அப்படிபட்ட மெய்நிகர்
நிகழ்வுகளை எழுத்தில் கொண்டு வந்து கவிதைகளாக உருவாக்கி இருப்பதே ‘வியாழக்கிழமையைத்
தொலைத்தவன்’ எனும் இந்நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இவரின் கவிதைத் தொகுப்பான இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம்
மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின்
‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’,
2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும்
2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.