logo

சிப்ஸ் உதிர் காலம்


நூல் பெயர்    :  சிப்ஸ் உதிர் காலம்
                      (கட்டுரை)

ஆசிரியர்    :  கவிஜி 

பதிப்பு            :  முதற்பதிப்பு 2020

பக்கங்கள்    :  159

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  கமல் காளிதாஸ்

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ120
கண்களால் பார்ப்பதை மனது ஏந்திக்கொள்கிறது. மனம் ஏந்திக்கொண்டதை கைகள் எழுதிக்கொள்கின்றன. எழுதியதைப் பார்க்கின்றவன் வாசகன், பார்ப்பதை எழுதுகின்றவன் எழுத்தாளன். இந்த மகரந்தச் சேர்க்கையின் மற்றொரு பெயரே இலக்கியம். இலக்கியம் செய்தல் என்பது வேறொன்றுமில்லை – இயற்கை, யாரோ ஒருவரின் விழிகளில் விழுந்து எழுத்தால் எழுந்து நிற்கும் ஆசிர்வாதமேயாகும். அப்படியான ஆசிர்வதிக்கப்பட்ட காட்சிகளையெல்லாம் கட்டுரைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘சிப்ஸ் உதிர் காலம்’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வாசிப்பவரை காட்சிக்கேற்றவாறு அந்தந்த இடத்திற்கே கடத்திச் சென்று கண்ணாமூச்சி ஆடவைக்கும். இதுவரை நாம் வேடிக்கை பார்த்த யாவற்றையும் வரிகளின்மூலம் மனதில் அசைபோட வைப்பதே இத்தொகுப்பின் பலம்.

வால்பாறையை பிறப்பிடமாகவும் கோவையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கவிஜி அவர்களுக்கு இது, ஐந்தாம் தொகுப்பு. வால்பாறையே தனக்கு இலக்கியம் வளர முக்கியக் காரணம் எனச் சொல்லும் இவர், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் புதுமையும் புதிரும் நிறைந்த தன் கதைகளாலும் கட்டுரைகளாலும் கவிதைகளாலும் நன்கு அறியப்பட்டவர். தன் ‘ஊதாநிறக் கொண்டை ஊசி கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்பிற்காகவும், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற நாவலுக்காகவும் படைப்புக் குழுமத்தின் இலக்கிய விருதை இருமுறை பெற்றவர். மேலும் படைப்பின் உயரிய விருதான இலக்கியச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

வேர்த்திரள்


0   1503   0  
September 2019

நிறமி


0   1636   0  
January 2020