நூல் பெயர் : படித்துறைப் பித்தன்
(கவிதை )
ஆசிரியர் : துளசி வேந்தன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 118
வடிவமைப்பு : பழனிவேல் மா.சு.
அட்டைப்படம் : முகம்மது புலவர் மீரான்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
பித்தன் எப்போதும் ஞானத்தின் திறவுகோல். அவனது மொழியும் ஞானமும் வானத்தின் கோள்களில் வட்டமடிக்கும் வல்லமை பெற்றவை. கடந்த காலம் என்பது முடிந்துபோய்விட்ட ஒன்றல்ல, அதனை அங்கீகரித்து அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைப்பவன் அவன். அப்படியானதொரு மறுபரிசீலனை கடந்தகாலத்தை அறியாமையோடும், வெகுளித்தனத்தோடும் அணுகுவதாக இல்லாமல் முரண்நகையோடு அணுக அனுதினமும் போராடுபவன் பித்தன். அவனை அறியாமை, வெகுளித்தனத்தோடு அணுக முற்பட்டால் நம் சரித்திரத்தை நாமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என புன்னகைத்து விடுவான். இம்மாதிரியான நிகழ்வுகள் மூலம் நம்மைத் தொந்தரவு செய்யும், நம்மை பிரமையிலிருந்து மீட்டெடுத்து மிரட்டும், நமக்கிருக்கும் பிரச்சினையை வலிகள் மூலம் அல்ல வரிகள் மூலம் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கும் பித்தனின் பேச்சை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'படித்துறைப் பித்தன்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எதார்த்தத்தின் அடையாளத்தை நமக்குள் அசைபோட வைப்பதும். இன்னும் மேலே சென்று உருத்தெரியாமலாக்கிவிட்டு போகும் அரூபம் போல நம் மனதில் பதிந்து விட வைப்பதுமே இந்நூலின் பலம்.
சென்னையை வசிப்பிடமாக கொண்ட படைப்பாளி துளசி வேந்தன் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் இவர், இன்றைய இணைய ஊடங்களில் தனது இலக்கிய பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது