நூல் பெயர் : ஊதாப்பூக்களின் சுழற் படிக்கட்டுகள் (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : ஜின்னா அஸ்மி (தொகுப்பு)
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
190
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 260
கவிதைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு எப்போது பிரசுரமாகும் எனக் காத்திருக்கும்
காலங்கள் மாறிவிட்டன. படைப்பாளிகள் தாம் எழுதும் கவிதைகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து
எல்லோருக்கும் சென்று சேரும் வகையில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
இணைய வசதிகள் பெருகிவிட்ட இந்நாட்களில் சமூக வலைத்தளங்களில் குழுக்களாகவும் அமைப்புகளாகவும்
தமிழ் வளர்க்கும் நவீனத் தமிழ்ச் சமூகத்தில் தனக்கென ஒரு பாணியையும் குறிக்கோளையும்
கொண்டு தனித்துவமாக இயங்கி வரும் படைப்பு குழுமம் பெருமையுடன் வெளியிடும் தொகுப்பு
‘ஊதாபூக்களின் சுழற்படிக்கட்டுகள்’. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் படைப்பாளர்களால்
குழுமத்தில் பதிவேற்றப்பட்டு பின்பு சிறந்த கவிதைகளாகத் தேர்வாகி ‘படைப்பு கல்வெட்டு’
கவிதை மின்னிதழில் பிரசுரமானவை. இதிலிருந்தே மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரமும்
கவிச்சுடர் விருதுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.