கண்மணி ராஜாமுகமது கவிதைகள்
நூல் பெயர் : கண்மணி ராஜாமுகமது கவிதைகள்
(கவிதை )
ஆசிரியர் : கண்மணி ராஜாமுகமது
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 142
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 130
மௌனங்களை உடைக்கும் சொற்களும், மலர்க்கிரீடத்தை அலங்கரிக்கும் பூக்களும் தேவனின் ஆசிர்வாதங்களைப் போல மிகத் தூய்மையானவை. ஆசிர்வதிக்கப்பட்ட சொற்கள் இலக்கியமாகின்றன. இலக்கியமாக்கப்பட்ட சொற்களும் ஆசிர்வதிக்கப்படுகின்றன. தன்னைத்தானே தரிசித்துக்கொள்ளும் சொற்களோ கவிதையாகின்றன. மரத்தை வெட்டினாலும் அதன் நிழலை யாராலும் வெட்ட முடியாததைப் போல எழுத்தை எப்படி வெட்டினாலும் அதன் நிழல் கவிதையாகி விடும் காரணம், கவிதை தனக்கான வெளிச்சத்தையும் நிழலையும் தானே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அப்படிப்பட்ட கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘கண்மணி ராஜாமுகமது கவிதைகள்’ நூல். விதைகளை இடும் விரல்களுக்கு விருட்சங்கள் தனது வேரிலிருந்து இயற்கை முத்தம் அனுப்புவதுபோல இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும், வாசிப்பவரின் மனதுக்குள் எழுத்தின் சுகந்தம் எதார்த்தமாக வந்து பரவும் என்பதே இந்நூலின் பலம்.
மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தில் பிறந்த கண்மணி ராஜாமுகமது, அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்திலும், தொழில் நிமித்தமாக சென்னையிலும் வாழ்ந்து வருகிறார். திரைப்படத்துறையில் கதை வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும், இயக்குநராகவும் பணிபுரிவதோடு கவிஞராகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார். கன்னடம், மலையாளத் திரைப்படங்களிலும் பணியாற்றும் சிறப்புக்குரியவர். மூன்று கவிதை நூல்கள், ஒரு சிறுகதை நூல் என நான்கு நூல்கள் அவர் ஏற்கெனவே வெளியிட்டு இலக்கிய உலகில் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.