இசைதலின் திறவு
ஜானு இந்து
ஓவியத்தி வழியே உள்நுழைந்து வெளியேறும் உயிர்ப்பை எந்தவொரு வார்த்தையாலும் சொல்லிவிட முடியாததைப்போலவே அகம் சார்ந்த எழுத்தும். இவ்வகையான எழுத்துக்களை வசப்படுத்துவதென்பது, மனதில் தோன்றி மறையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கைகளிலும் கூறிய வாளை பரிசளிப்பது போன்றது. காரணம் ரணங்களை ஊடறுத்துச் செல்லும் வகையில் சொற்களெனும் ராட்டினத்தை சுழற்ற வேண்டும். இம்மாதிரியான சுழன்றடிக்கும் சொற்களை தாங்கி நிற்கும் வரிகளைக் கொண்டே அகக்கண்களின் திரையை விலக்க முடியும். அப்படி அகக்கண்களின் வழியே தரிசித்ததை எல்லாம் ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே “இசைதலின் திறவு” தொகுப்பு. இன்றைய காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் ஆழ்மன சஞ்சலங்களை சொல்லும் எழுத்துக்களுக்கு தனியே ஒரு வாசகர் வட்டம் இருப்பது இத்தொகுப்பின் பலம்.
தமிழகத்தை பிறப்பிடமாகவும், பெங்களூரை வாழ்விடமாகவும், சமூக சேவகியுமான படைப்பாளி ஜானு இந்து அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவர் வாரப பத்திரிக்கைகளிலும், சமூக வளைத்தளங்களிலும் தன் எதார்த்தமிக்க பல படைப்புகளால் நன்கறியப்பட்டவர். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பைடத்தக்கது.
நூல் வகைமை
கவிதை
நூல் விலை
100
வெளியீடு
படைப்பு பதிப்பகம்
அட்டைப்படம்
சந்துரு