இயற்கையின் தீர்க்கதரிசிகள்
நூல் பெயர் : இயற்கையின் தீர்க்கதரிசிகள்
(கட்டுரை)
ஆசிரியர் : வில்லியம்ஸ்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 138
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
இயற்கையையும் சுற்றுச்சூழலையும் இன்னும் நாம் புரிந்துகொள்ளவில்லை. எவ்வளவு படித்திருந்தாலும் கூட நம்மிடம் இயற்கைச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. காரணம் பல்லி விழுந்த உணவை உண்டால் மரணமே என்ற நம்பிக்கை மருத்துவ ஆதாரமற்றது. உண்மையில் பல்லி நஞ்சற்றது என நாம் அறிந்திருக்கவில்லை. காதுள்ளவன் கேட்கக்கடவன், விழியுள்ளவன் பார்க்கக்கடவன் ஆனால், மனதுள்ளவன் மட்டுமே நேசிக்கக்கடவன். வாழ்வை நேசிப்பவன் உழைப்பாளி ஆகிறான், சமூகத்தை நேசிப்பவன் போராளி ஆகிறான், அறிவியலை நேசிப்பவன் விஞ்ஞானியாகிறான், ஆன்மீகத்தை நேசிப்பவன் ஞானியாகிறான், இயற்கையை நேசிப்பவன் தீர்க்கதரிசியாகிறான். இப்படி இயற்கையை நேசித்த தீர்க்கதரிசிகளின் வாழ்வியலையும் அதன் சூழலையும் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'இயற்கையின் தீர்க்கதரிசிகள்' நூல். இயற்கைக்கும் நமக்கும் உள்ள நுட்பமான உறவு மற்றும் அதைச் சார்ந்த பல சூழலியல் பிரச்சனைகள் மேலும் நாம் எதிர்கொள்ள நேரிடும் எதிர்மறைப் பயன் என எல்லாவற்றையும் ஆதாரங்களோடு அலசி ஆராய்ந்துள்ளதே இந்நூலின் பலம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைப் பூர்வீகமாகவும், கள்ளக்குறிச்சியை வாழ்விடமாகவும், கொண்ட படைப்பாளி வில்லியம்ஸ் அவர்களுக்கு இது, ஐந்தாம் நூல். இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. படைப்பு உட்பட இன்றைய இணைய ஊடங்களிலும் தனது இலக்கிய பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் ‘மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் மற்றும் பல விருதுகளையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.