நூல் பெயர் :
கங்கோத்ரி (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
218
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 300
வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த விஷயங்களில் குழப்பம் இருக்கிறதோ, தெளிவு அல்லது
தகவல் தேவைப்படுகிறதோ அந்தந்த விஷயங்களுக்கெல்லாம் அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்தவர்களிடம்
அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத்தெரிந்து கொள்வதே மானுடத்தின் மகத்தான செயல். மற்றவர்களது
அனுபவங்களில் இருந்துப் பாடம் கற்றுக் கொள்கிறவர்களே அறிவாளிகள் என்கிறார் வால்டேர்.
மற்றவர்கள் தரும் அனுபவ ரீதியான தகவல்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால்
அந்த அனுபவங்களை எல்லாம் நாமே அனுபவித்து, பிறகு பெற நினைப்பது இயலாத காரியம். மேலும்
அந்த அளவுக்கு நேரமும் போதாது. எல்லோருக்கும் அனுபவங்கள் வருகின்றன. ஆனால் வெகு சிலரே
அனுபவ அறிவைப் பெறுகின்றனர். விழிப்புணர்வுடன் இருந்தால் அனுபவ அறிவு கிடைக்கும். அனுபவ
அறிவை வளர்த்துக் கொள்பவர்களுக்கு மனப்பக்குவம் எளிதாய் வரும். ஒவ்வொரு அனுபவத்தின்
முடிவில் இருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்கின்றோம். அதுவே நாம் வாழ்க்கையில்
வெற்றியடைய உதவும். அனுபவங்களும், அனுபவம் பெற்றவர்கள் தரும் கருத்துக்களும் அறிவுரைகளும்
நம்மை வழி நடத்தும் கருவிகளாகும். அப்படிப்பட்ட அனுபவக் கட்டுரைககளை எல்லாம் ஒன்றுதிரட்டி
உருவாக்கப்பட்டிருப்பதே “கங்கோத்ரி” எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.