logo

நிறமி


புறவாழ்வைப் பாடும் இலக்கியங்களும் இதிகாசங்களும் தோன்றிய அதே காலத்தில்தான் தலைவன் தலைவியின் அகவாழ்வைப்பாடும் இலக்கியமும் அரங்கேறி முக்கியத்துவம் பெற்றன தமிழில். புறவாழ்வில் நிகழும் அனைத்தும் அகவாழ்வின் ஆரம்பப் புள்ளியிலிருந்தே தொடங்கும் என்பதன் அடிப்படைத் தத்துவமே இதற்கு காரணமாக இருக்கலாம். புறம்சார்ந்த விஷயங்களை கொஞ்சம் புலம்பலாகவும், கொஞ்சம் பொய்க் கோபங்களாகவும் புறந்தள்ளிவிட்டு அகம்சார்ந்த விஷயங்களில் அடைகாக்கும் தாய்ப்பறவையென அன்பைப் பொழிவதினாலாயே பெண் தாய்மை நிலைக்கு உயர்கிறாள். அப்படிப்பட்ட பெண்மையின் அன்பு, காதல் ஏக்கம், பிரிவு, தனிமை, தவிப்பு போன்ற எண்ணிலடங்கா எண்ணங்களை வண்ணங்களாக குழைத்து தருவதே  "நிறமி" கவிதைத் தொகுப்பு.  தலைவன் தலைவி, ஆடவர் மகளிர் என ஆதிச் சரித்திரத்தின் நீட்சியாக கணவன் மனைவி இடையே நிகழும் அகவாழ்வைப் படம் பிடித்திருப்பது இத்தொகுப்பின் பலம். 

தூத்துக்குடியைப் பிறப்பிடமாகவும் திருச்சியை வாழ்விடமாகவும் கொண்டுள்ள ரவிக்குமார் என்கிற ஆண்டன் பெனி அவர்களுக்கு இது ஐந்தாம் தொகுப்பு.  இவர் வாரப்பத்திரிக்கைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தன் எதார்த்தமிக்க பல படைப்புகளால் நன்கறியப்பட்டவர். இவரது முதல் தொகுப்பான "இந்த பூமிக்கு வானம் வேறு" படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது இவருக்கு. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நூல் பெயர்
நிறமி 

வகை 
கவிதைகள்

ஆசிரியர்
ஆண்டன் பெனி

பதிப்பு
முதற்பதிப்பு ( 2020) 

பக்கங்கள்
96

முகப்பு
முகமது புலவர் மீரான்
 
உள் ஓவியங்கள்
கலைமாமணி அன்பழகன்

உள் கட்டமைப்பு
ஐசக்

வடிவமைப்பு
ஹபீப் ரஹ்மான்

வெளியீடு
படைப்பு பதிப்பகம்

விலை 
ரூ.90 /-(இந்திய ரூபாய்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.