நூல் பெயர் : சற்றுமுன் விலைக்கு வைக்கப்பட்ட கவிதை (ஹைக்கூ)
ஆசிரியர் :
மு.ரகுபதி
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
90
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 120
நாம் பார்க்கும் பார்வையில் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகி விடுவதைப்போல, நாம் கேட்கும்
தருணங்களில் வார்த்தை அர்த்தமுள்ளதாகி விடுகிறது. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள
இடைவெளியில் சந்திப்புகள் சந்ததிகளாக விரிவடைந்தும் விடுகிறது. பாதைகளை மறந்துவிடும் பயணிகளுக்கு பயணங்களின் குறிப்புகள்
பயன்படுவதில்லை. பாதைகளையே வகுக்கத் தெரிந்திருந்தால் பயணக்குறிப்பு அவசியமே இல்லை.
ஒரு படைப்பாளியின் வாழ்க்கைப் பாதையில் இலக்கியப் பயணம் என்பது அவர் சார்ந்த சமூகத்திற்கு
சரியானவற்றைக் காட்டும் சரித்திரப் பாதையாகி விடுகிறது. அப்படிப்பட்ட சமத்துவ பாதையில்
தான் பார்த்த கவனித்த இயற்கையையும் மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் எதார்த்தங்களையும்
இலக்கியத்திற்குள் கொண்டுவந்து குறுங்கவிதைகளாக்கி இருப்பதே ‘சற்று முன் விலைக்கு வைக்கப்பட்ட
கவிதை’ எனும் இந்நூல்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் எனும் ஊரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
கொண்ட படைப்பாளி மு.ரகுபதி அவர்களுக்கு இது முதல் நூல். தமிழ் நாடு சிறப்பு காவல் படையில்
காவலராக பணியாற்றி வருகிறார். இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையில் ஆர்வமிகுந்த
இவர் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசுகளும் பதக்கங்களும் பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத் தக்கது.