logo

மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான் பூச்சி


நூல்                            : மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான் பூச்சி

நூல்  வகைமை          :  சிறுகதைகள்

ஆசிரியர்                    : பாலை நிலவன்

பதிப்பு                          :  முதற்பதிப்பு - 2023

பக்கங்கள்                  :  208

வெளியீட்டகம்          :  இலக்கிய படைப்பு குழுமம்

வெளியீடு                  :  படைப்பு பதிப்பகம்

விலை                         :  ரூ. 320

ஒரு மாமாங்கத்திற்குப் பிறகு தொகுப்பாகும் இக்கதைகளில் யாருடைய வலிகளையோ கவனிக்கும் கனவுக்குள் அகப்பட்டும் வாசகனின் காட்சிகள் அவனுக்கே நிகழும் சம்பவங்களாக உருமாறுகிறது. கனவுக்கும் கனவுக்கும் இடையே மொழி ஒரு தேவதூதனை வழிநடத்தும் ஒளி போல கதைகளை வழிநடத்துகிறது. குற்றங்களும்,வன்முறைகளும்,  ஏக்கங்களும், துயரங்களும் காதலர்களும்,  மரணங்களுமாய்த் தொடரும் மனிதப்பரப்பில் ஒரு மல்லாந்த கரப்பான் பூச்சியாக தவிக்கும் ஓர் உயிர் தான் இப்பூகோளமென்றால் அதில் மனிதன் யார் என்று அலைந்து தேடுகிற கதை சொல்லி முடிவில் கையறு நிலையில் வீடு திரும்பவில்லை இறந்து கொண்டிருக்கும் ஒரு மல்லாந்த கரப்பான் பூச்சியாகிறான்.

 சமகால புனை கதைகளின் புதிர் வட்டப்பாதைகளை இடைமறித்து வழியாற்றும் கதை தொகுதி நாமறியாத மாயத்தை படைப்புபித்தின் வழி நிகழ்த்தியுள்ளது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.