வான்காவின் சுவர்
ஜின்னா அஸ்மி
வயதாகும்போது இன்னும் வலிமை அதிகரிக்கும் வாழ்வு மொழிக்கு மட்டும்தான் உண்டு. ஒரு மொழியை வைத்தே அந்தச் சமூகத்தின் வரலாற்றை வரையறுத்துச் சொல்லிவிட முடியும். அந்த வரலாற்றுச் சரித்திரத்தை ஆதியிலிருந்து இன்றும் தாங்கி நிற்பது கல்வெட்டுகளே. அதனால்தான் இணைய வசதிகள் பெருகிவிட்ட இந்நாட்களில் கூட கவிதைகளை தாங்கி நிற்கும் மின்னிதழிற்கு கல்வெட்டு என்று பெயர் சூட்டி அடிக்கல் நாட்டியது படைப்புக் குழுமம். படைப்பாளர்களால் குழுமத்தில் பதிவேற்றப்பட்ட சிறந்த கவிதைகளை மாதந்தோறும் மின்னிதழாக வெளியிட்டு படைப்பாளிகளின் அங்கீகாரத்தை இலக்கிய மேடையில் அரங்கேற்றம் செய்தது. அப்படி அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளை மொத்தத் தொகுப்பாக்கித் தருவதே வான்காவின் சுவர்.
எல்லா வசந்தங்களையும் கொடுக்கும் இயற்கையால் கூட எல்லா காலங்களிலும் வசந்தங்களைக் கொடுக்க முடியாது ஆனால் எழுத்தால் கொண்டு வர முடியும் என்பதே இலக்கியத்தின் ஆகப்பெரும் சக்தி. அப்படிப்பட்ட இலக்கியத்தின் வாயிலாக உலகத்தையே ஒன்றிணைத்திருப்பது இந்நூலின் பலம்.
படைப்புக் குழுமத்தின் சொந்தப் பதிப்பாக வெளிவரும் நூல் இது.
நூல
வான்காவின் சுவர் ( படைப்பு மின்னிதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு)
தொகுப்பாசிரியர்
ஜின்னா அஸ்மி
நூல் வகைமை
கவிதை
நூல் விலை
180
வெளியீடு
படைப்பு பதிப்பகம்
அட்டைப்படம்
ஓவியர். ரவி பேலட்
பின் அட்டை ஓவியம்
கமல் காளிதாஸ்