நூல் பெயர் : புத்தனின் கடைசி முத்தம்
(கவிதை)
ஆசிரியர் : லக்ஷ்மி
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 138
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஓவியர் ரவிபேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ120
ஊர்கூடித் தேரிழுப்பது போன்ற இலகுவான காரியமல்ல சொற்களைக் கட்டி இழுப்பது. நாம் சொல்வதைக் கேட்காமல் இருப்பதே சொற்களின் முதல் வேலை. அதிலும் முன்னுக்குப் பின்னான முரண்களைக் கொண்ட சொற்களைக் கையாள்வது என்பது ஆசையே வேண்டாமென்ற புத்தனை ஆசையோடு ஏற்றுக் கொண்ட போதி மரத்தைப் போலானது. காகிதத்திற்கே தெரியாமல் அதன் மீது சொற்களை நிரப்புவதே ஒரு கலை. அந்தக் கலை வடிவத்திற்குள் கட்டுப்பட்ட சொற்கள் யாவும் பிரம்மிப்பூட்டும் கவிதையாகின்றன. அப்படிப்பட்ட கவிதைகளை எல்லாம் காட்சிக்குள் கொண்டுவந்து, தாய் தன் குழந்தையைத் தொடும் முதல் ஸ்பரிசமென உணர்வுக் குவியலோடு உருவாக்கப்பட்டிருப்பதே "புத்தனின் கடைசி முத்தம்" தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் நம் வாழ்வின் ஏதோவொரு நினைவலைகளை நமக்குள் நெருக்கமாக்கி விட்டுப்போவது இத்தொகுப்பின் பலம்.
கடப்பாக்கத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை அண்ணாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட, அரசு அலுவலரான படைப்பாளி “லக்ஷ்மி” அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவரது பல கவிதைகள் பல முன்னணிப் பத்திரிக்கைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் மற்றும் படைப்பு பரிசுப்போட்டியில் கவிஞர் மு.மேத்தா அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.