நூல் பெயர் : மைக்ரோ மேகாஸ் உலக விஞ்ஞான புனைவு
நூல் வகைமை :
அறிவியல் புனைகதைகள்
ஆசிரியர் : பிரவீண் பஃறுளி
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 596
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 649
வினோதங்களும் மாயங்களும் நிரம்பிய நாமறியாத பேரண்டப்பெருவெளியின்
அசாத்தியங்களின் கனவுப் பாதையில் சிருஷ்டிப்பின்
மகத்துவ கண்கொண்டு அலையும் உலகளாவிய விஞ்ஞான புனைவு புத்தகமாக விரிந்துள்ள இந்நூல்
இன்னொரு வகையில் மனித யத்தனங்களுக்கு மீறிய அசேதன உயிர்ப்பரப்பின் கனவு புத்தகமாய்
மலர்ந்துள்ளது. காண்பதற்கும் காணப்படாததற்கும் அறிவுக்கும் அறியாமைக்கும் நடுவே மாபெரும்
புனைவின் எழுத்தை கோர்த்தெடுத்துள்ள, உலக விஞ்ஞான புனைகதைப் படைப்பாளிகள், மனித அறிவின் விசாலத்தைத்
தாண்டி கிரகங்களின் அறிய ஒன்றா வியப்புகளை பின் தொடர்ந்து தாவர ஜீவ ஜந்துக்களிலிருந்தும்
நித்திய காலமும் அளக்கவியலா கோள்களின் மகா சிருஷ்டிப்பின் எண்ணிலடங்கா படைப்பு துளிலிலிருந்தும்
துகள்களின் நுண் துகள்களிலிருந்தும் இக்கதைகளை காணாப்புதையலென கண்டெடுத்துள்ளனர்.
ப்ரவீண் பஃறுளியின் தொகுப்பாக்கத்தில் தமிழின் தலைசிறந்த
மொழிபெயர்ப்பாளர்களின் பேராழமும் நுண் விரிவும் கூடிய மொழியாக்கத்தில் உலக விஞ்ஞான
புனைவுப் புத்தகம் தனது விசித்திர விநோத மாய கனவுப் பக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு
படிக்கத் திறக்கிறது.