நூல் பெயர் : பாதி இருட்டு பாதி வெளிச்சம் (கட்டுரைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
236
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 330
கவிதை என்பது ஆன்மாவை அறிவது போன்றது. கவிதை எழுதுவது என்பது, தற்காலிக விஷயங்களின்
மீதான மோகத்திலிருந்து வெளியே வந்து நித்திய ஆத்மாவை உணர்வது போன்றது. கவிதையை வாசிப்பது
என்பது, தற்காலிக மகிழ்ச்சியை மறந்து நிரந்தர மகிழ்ச்சியைத் தரும் பயணத்தை நோக்கிய
வல்லமையையும், தூய்மையான மற்றும் உண்மையான சுயம் பற்றிய அறிவை வழங்கும் திறனையும் போன்றது.
அதன் பலன் என்பது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை உடைத்து, நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு அப்பால் சென்று,
ஒருபோதும் மறையாத பேரின்பத்தில் இருக்க வைக்கும். அதை அனுபவிப்பதன் மூலம் அனைத்து உலக
அடிமைத்தனங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க வைக்கும். அகம் புறம் என்பது இருள் வெளிச்சம்
என நம்மை உணர வைக்கும். அதில் நாம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சினைகளும் புதிர்களும்
எளிதில் தீர்க்கப்படுவதற்கான திறவுகோல்கள் கிடைக்கும். அப்படி அகவெளியை அகலமாக்கும் ஆழ்மனச் சிந்தனைகளைத்
தூண்டுகிற கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘பாதி இருட்டு பாதி
வெளிச்சம்’ எனும் இந்நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏற்கனவே பதிப்பித்த இவரின் முதல் கவிதைத் தொகுப்பான இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.