நூல் பெயர் : மரமாபிமானம் (நாவல்)
ஆசிரியர் :
கோபிநாதன் பச்சையப்பன்
பதிப்பு : முதற்பதிப்பு -
2024
பக்கங்கள் :
296
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 410
கதாபாத்திரங்களின் தனிப்பட்ட அனுபவங்களை விவரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டதும்
, இந்த கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் வாழும் உலகத்தின் நெருக்கமான சமூகத்தை பிரதிபலிப்பதும்,
மிகவும் சிக்கலாக தொடங்கினாலும் சிக்கலற்ற முடிவுரையை தரவல்லதும், உள் உணர்வுகள் மற்றும்
எண்ணங்கள், அத்துடன் நேர்மறையான, முரண்பட்ட கருத்துக்கள் அல்லது மதிப்புகளை பொதுவாக
ஆராயப்படுவதும், இலக்கியத்தின் முந்தைய வடிவங்களை விட நாவல்களில் அதிகம். இது தனிப்பட்ட
கதைகள் மட்டுமல்ல, அவற்றைப் படிக்கும் அனுபவமும் கூட தனித்தன்மையாக இருப்பதே இதன் தனிச்சிறப்பு.
கதைசொல்லலின் ஒத்த வடிவங்களைத் தாங்கி இருப்பதும், பொதுவில் படிக்க அல்லது பார்வையாளர்களாக
நுகரப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதும், தனிப்பட்ட வாசகனை நோக்கியே அதிகம்
நகரும் யுக்தியைக் கையாளப்பட்டிருப்பதுமே ‘மரமாபிமானம்’ எனும் நூல்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், கத்தார் நாட்டை
வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ‘கோபிநாதன்
பச்சையப்பன்’ அவர்களுக்கு இது நான்காவது நூல். இவருடைய மற்ற மூன்று நூல்களும் படைப்பு
பதிப்பகம் மூலமே வெளிவந்து பலரது கவனம் பெற்றது. கத்தார் நாட்டில் வழங்கப்படும் ‘தமிழ்
மகன் விருது’ என்ற தனித்துவமான விருதையும், உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா வழங்கிய
‘The Enlightment Award’ எனும் விருதை பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.