சொற்களால் என்ன
செய்து விட
முடியும் என
யோசிக்கும் தருணத்திலும்,
சொற்கள் இல்லையெனில்
எதையும் செய்ய
முடியாது என
யாசிக்கும் தருணத்திலும்
கஸல் நமக்குள்
அரும்பி விடும்.
காலத்தின் முடிவிலியில்
காதலை ஏந்தி
நிற்கும் வல்லமை
கஸலுக்கு மட்டுமே
உண்டு. அடிமனதில் தோன்றும் அதிர்வலையை
எந்த டெசிபல்
கொண்டும் அளவிட
முடியாத பொழுது
கஸலை கண்கள்
தேட ஆரம்பித்து
விடும். அப்படிப்பட்ட காதல் அதிர்வுச்
சொற்களை ஒன்று
திரட்டி கடவுளின்
பார்வையில் காணிக்கையாக்கும் வரிகளாக உருவாக்கப்பட்டிருப்பதே ‘உன் பொய்களில்
உண்மையாகிறேன்’ எனும்
தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு
கவிதையும் வாசிப்பவர்களின் உணர்ந்து கொண்டதற்கிணங்க, பொய்க்கு
பின்னாலிருக்கும் உண்மையையும்,
உண்மைக்கு முன்னால்
மறைந்திருக்கும் பொய்யையும்
ஞானத்தின் கண்கள்
வழியே காட்சிப்படுத்தும் என்பதே
இத்தொகுப்பின் பலம்.
வேலூர் மாவட்டம்
குடியாத்தத்தைப் பிறப்பிடமாகவும்,
சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட, பல் மருத்துவரான
படைப்பாளி தி.கலையரசி அவர்களுக்கு
இது இரண்டாம்
தொகுப்பு. இவரது முதல் நூலும்
படைப்பு பதிப்பகம்
மூலமாகவே வெளியிட்டு
பலரது கவனத்தை
தன் பக்கம்
திருப்பியவர். இவர்,
இன்றைய இலக்கிய
உலகிலும், பல பத்திரிகை இதழ்களிலும் தன்
படைப்புகளால் நன்கு
அறியப்பட்டவர். மேலும்
படைப்பு குழுமத்தால்
வழங்கப்படும் மாதாந்திர
சிறந்த படைப்பாளி
என்ற தனித்துவமான
அங்கீகாரத்தையும், கவிச்சுடர்
எனும் உயரிய
விருதும் பெற்றவர்
என்பது குறிப்பிடத்தக்கது.