logo

தோற்ற மயக்கம்


நூல் பெயர் : தோற்ற மயக்கம் (கட்டுரைகள்)
ஆசிரியர் : சீனிவாசன் நடராஜன் © 
பதிப்பு : முதற்பதிப்பு \ ஜனவரி- \ 2022
பக்கங்கள் : 190
வடிவமைப்பு : கோபு ராசுவேல்
அட்டைப்படம் : சீனிவாசன் நடராஜன் 
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை 
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 200
மனிதன் ஏமாறக்கூடியவன் அல்லது ஏமாற்றக்கூடியவன் ஆனால் மனம் ஏமாறக்கூடியது அல்ல. மனதின் தெளிவை வைத்தே மனிதனை எடையிட முடியும். சாதாரண மனிதன் எப்போதும் மாயத் தோற்றத்தில் மனதைத் தொலைப்பவன் அல்லது தொலைபவன், காரணம் கண்கள் திறந்திருக்கும்போது அவன் முன்னால் தோன்றும் கானல் நீரையும், கண்கள் மூடி இருக்கும்போது அவன் முன்னால் தோன்றும் கனவின் காட்சியையும் அவனால் நம்பாமல் இருக்க முடியவே முடியாது. அதனால்தான் மயக்கமோ, குழப்பமோ இல்லாத தெளிவான சூழலில் கூட நமது புலன்கள் நம்மை ஏமாற்றுவதை நம்மால் தடுக்க இயலாததாய் இருக்கிறது. அத்தகைய மாய உணர்ச்சி அல்லது மாயத் தோற்றம் என்பதே தோற்ற மயக்கம் ஆகும். ஆனால் எழுத்தாளன் அந்த மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருப்பதாலும், அத்தகைய மாயத்தோற்றத்தைத் தோற்கடிக்கும் மனதை எழுத்தில் கையாளப் பழகி இருப்பதாலும் அவனது சமூகப் பார்வையும் புத்திக் கூர்மையும் மாயத்தோற்றத்தை, தோற்ற மயக்கமென உருமாற்றி இலக்கியமாக்கி விடுகிறது. அப்படிப்பட்ட சமூகப் பக்கங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'தோற்ற மயக்கம்' நூல். இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் எதார்த்தங்களின் சிம்மாசனத்தின் மேல் ஏணி  வைத்து உச்சத்தில் அமர்ந்திருக்கும்.

இராசமன்னார்குடியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி நாவலாசிரியர் சீனிவாசன் நடராஜன்   அவர்களுக்கு இது பதினொன்றாம் நூல். இதுவரை ஒரு கவிதை நூல், இரண்டு  தொகுப்பு நூல்கள், மூன்று நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் தன் புதுமையும் புதிரும் நிறைந்த கதைகளாலும், கட்டுரைகளாலும், நாவல்களாலும் நன்கு அறியப்பட்டவர். இவரது தாளடி நூல் எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருப்பதுடன்,   நாவலுக்காக  படைப்பு குழுமத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.