logo

இதுவும் கடந்து போகாது


நூல் பெயர்    :  இதுவும் கடந்து போகாது
                      (கட்டுரைகள் )

ஆசிரியர்    :  யாழினி ஆறுமுகம் 

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2022

பக்கங்கள்    :  88

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு டிசைன் டீம்  

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
  
வெளியீடு    :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ 100

பயணங்களே உலகுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. உலக வரைபடத்துக்கும் உயிர் கொடுத்தன. பூமியில் பிறந்த மனிதர்களுள் வாழ்நாளில் ஒரு நாளேனும் பயணங்கள் மேற்கொள்ளாதவர் என்று எவருமில்லை. பயணங்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நம்மை நமக்கே அடையாளப்படுத்த உதவுகின்றன. பயணம் என்பது நமது மூளைத் திறனைத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். பயணங்கள் வாழ்வின் பல படிப்பினைகள் மற்றும் பாடங்களைக் கற்றுத் தருகின்றன. சுமைகளைக் கடந்தும், நினைவுகளை தக்கவைத்தும், அனுபவத்தையும், அனுபவித்ததையும், காலமும் சூழலும் மனதின் இடுக்குகளில் சிக்கி உள்ளதையும் கட்டுரைகளாக ஒன்று சேர்த்து  உருவாக்கப்பட்டிருப்பதே 'இதுவும் கடந்து போகாது' நூல். இதில் உள்ள  ஒவ்வொரு கட்டுரையும் எல்லோருக்கும் புரியும் வகையில் மிக எளிய நடையில் இருப்பதும் அது பயண அனுபவங்களை  வாசிப்பவர் மனதில் விதைத்து விட்டுப் போவதும் இத்தொகுப்பின் பலம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி யாழினி ஆறுமுகம் அவர்களுக்கு இது மூன்றாம் தொகுப்பு. இவரது இரண்டாம் தொகுப்பான 'நினைவும் புனைவும்' என்ற நூல் படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பலரது கவனம் பெற்றது. இவர் 'விதைகள் வாசகர் வட்டம்' எனும் இலக்கிய அமைப்பின் தலைவராக இருந்துகொண்டு ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்துவது போன்ற எண்ணற்ற இலக்கியம், சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.  இணையத்தில் பல தளங்களிலும் இவர் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பதிவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.