logo

தௌவின்மையின் இன்பம்


நூல் பெயர்                :  தௌவின்மையின் இன்பம்  (கட்டுரைகள்)

ஆசிரியர்                    :  கரிகாலன்

 

பதிப்பு                          :  முதற்பதிப்பு - 2024

 

பக்கங்கள்                  :  180

 

வெளியீட்டகம்          :  இலக்கிய படைப்பு குழுமம்

 

வெளியீடு                  :  படைப்பு பதிப்பகம்

 

விலை                         :  ரூ 250

உலக கவிதைப் போக்குக்கு இணையாக கவனம் பெறக்கூடியது சமகால  தமிழ்க் கவிதை இயக்கம். தமிழில் கவிதைகள் வளர்ந்த அளவு, அது குறித்த உரையாடல் கலை வளரவில்லையோ? எனும் ஐயம் ஏற்படுகிறது. குறிப்பாக புதிதாக எழுத வருகிற கவிஞர்கள் குறித்தும், அவர்களது கவிதைகள் குறித்தும், பேசுகிற நிலையில் சற்று மந்தகதி நிலவுகிறது. இச்சூழலில் கவிஞர் கரிகாலன் அவர்களது பணி முக்கியமானது. தொடர்ந்து கவிதையில் காத்திரமாக இயங்கிவந்த போதிலும்கூட, சமகால கவிதைகள், கவிஞர்கள் குறித்தும் கரிகாலன் பேசியும் எழுதியும் வருகிறார். குறிப்பாக இளங்கவிஞர்களை, எவ்வித மனத்தடையும் இல்லாமல் தட்டிக்கொடுக்கும் வகையில் அவர் எழுதிவருவது பாராட்டத்தக்க செயல். இக்கட்டுரைகள் சமகால தமிழ்க் கவிதைச் செயல்பாட்டை புரிந்து கொள்ளவும், தமிழில் நிலவக்கூடிய புதிய கவிதைப் போக்குகளை அவதானிக்கவும் நமக்கு உதவி செய்பவையாக இருக்கின்றன. உலகக் கவிகளோடு நம் கவிஞர்களை,  இணைத்துப் பேசும் கரிகாலனின் பாணி,  நம் இளங்கவிகளுக்கு உற்சாகம் தரக்கூடியதாக அமையும். எவ்வித குழுமனப்பான்மையோ, விருப்பு வெறுப்போ இல்லாமல், தன் மொழியில் எழுதுபவர்களை கவனப்படுத்த வேண்டும் எனும் கவிஞரின் நேர்மறையான எண்ணத்தின் வெளிப்பாடுதான் ‘தெளிவின்மையின் இன்பம்’ எனும் இந்நூல்.

கடலூர் மாவட்டம் மருங்கூரை பிறப்பிடமாகவும், விருத்தாசலத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர், எழுத்தாளர் கரிகாலன். இது அவரது முப்பதாவது நூல்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.