நூல் பெயர் : பெருந்துணைத் தேறல்
(கவிதை )
ஆசிரியர் : கருவை ந.ஸ்டாலின்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 90
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
உருகும் இதயத்திற்கு உருவகம் சொல்லித்தரும் மனதைப் போன்றது கவிதை. தன்னிலையின் பொருளை முழுமையாக விடுவித்தல், சுதந்திரச் சொற்கள் கவிதைகளில் பயன்படுத்தப்படல், பொதுப் பேச்சுமொழியைப் பயன்படுத்தல் மற்றும் சரியான வார்த்தைகளைக் கவிதையாக்கல் என்பது நவீனக்கவிதை. தாம் நினைக்கும் ஒன்றை ஆத்மார்த்தமாக வரிகளில் சுருங்கச் சொல்லிவிட முடியும் என்ற நிலைப்பாடே கவிதையின் அடிநாதமாகும்.
இன்றைய இலக்கிய உலகில் எத்தனையோ உத்திமுறைகள் இருப்பினும் கவிதைகளில் தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றி கொஞ்சம் புதுமை, கொஞ்சம் நவீனம் கலந்து அதில் ஒரு தனித்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இவரது எழுத்தில் இருக்கச் செய்கிறது. அப்படிப்பட்ட தனித்துவ வரிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘பெருந்துணைத் தேறல்’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவி மனதில் நினைவலைகளைப் போல நகர்த்திச்செல்லும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
கரூரை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கருவை ந.ஸ்டாலின் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகை உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் இவர் தன் எழுத்துகளால், தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை நடத்திய கவிதைப்போட்டியில் பரிசும், நக்கீரன் இனிய உதயம் இதழ் நடத்திய மாணவர் கவிஞர் போட்டியில் மாநில அளவில் வென்று நட்சத்திரக்கவிஞர் விருதும் வென்றுள்ளார். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.