நூல் பெயர் : ஏழ் கருணை வானவில் (கவிதைகள்)
ஆசிரியர் :
மணி சண்முகம்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
106
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 150
நம்மைச்
சுற்றி எதுவுமே இல்லை என ஏங்கும் மனதிற்கு நம்மைச் சுற்றி எவ்வளவோ இயற்கை இருக்கிறதே
என ரசிக்கத் தெரிவதில்லை. செயல் மற்றும் எதிர்வினை, சேர்த்தல் மற்றும் கரைத்தல் ஆகியவற்றின்
செயல்பாட்டில், ஒரு புதிய பொருளைத் தோற்றுவிக்க முடியும். ஆனால் தன்னியல்பாகவே உருவான
இயற்கையை யாராலும் தோற்றுவிக்க முடியாது. மனித இனமே இயற்கையின் கண்டுபிடிப்புதான்.
ஆனால் இயற்கையிடமிருந்து எடுக்கப்பட்டதை நம் புதிய கண்டுபிடிப்புகள் என புளங்காகிதம்
அடைந்துகொள்கிறோம். இயற்கை எப்போதும் அழகானது. இருப்பினும் எழுத்தில் கொண்டு வரும்போது
இன்னும் அழகாகி விடுகிறது. காற்று, வானம், மலை, அமாவாசை, நிலவு, மழைத்துளி, வானவில்
என எல்லா எழிலையும் வேறொரு கோணத்தில் கவிதைகளாக்கியிருப்பதே “ஏழ் கருணை வானவில்” எனும்
இந்நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனதிற்குள் மழைச்சாரலை அடித்து
விழிகளில் வானவில்லை உதிக்கவைக்கும் என்பதே இந்நூலின் பலம்.
கடலூரைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மணி சண்முகம் அவர்களுக்கு இது பத்தொன்பதாவது நூல். சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் காவல்துறைப் பணியோடு இன்றும் எழுதி வருகிறார். இதுவரை வெளியான இவரது மற்ற தொகுப்புகள் வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதுடன், படைப்பு பதிப்பகத்தில் இவர் வெளியிடும் மூன்றாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.