நூல் பெயர் : ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு தொலைதூர அழுகுரல்
நூல் வகைமை : நேர்காணல் / கவிதைகள்
ஆசிரியர் : மொழிப்பெயர்ப்பாளர்கள் - ஆர். பாலகிருஷ்ணன் - அனுராதா
ஆனந்த்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 106
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 170
நான் டெரெக் வால்காட்டின் நேர்காணலைப் படிக்க நேர்ந்த போது
அவருடைய கவித்துவ ஆளுமை மற்றும் உலகளாவிய மெய்யியல் தரிசனத்தையும் பார்த்து மிகவும்
வியந்தேன். வால்காட்டு கவிதையைப் பிரார்த்தனைக்கு ஈடாக ஓர் ஆன்மிக அனுபவமாகக் கொள்ளும்போதே
அவர் தனது மரபின் உள்ளார்ந்த வேரின் மகத்துவத்தையும் சேர்த்தே தன் கவிதையின் ஆன்மாவாக்
கொண்டு வருகிறார்.
வால்காட் கரிபியித் தீவின் ஞாபகங்களை தன் கவிதைகளில் உயிர்த்தெழச்
செய்கிறார். ஒரு கவிதையை எழுதுவதற்கும் முன்னும் பின்னும் கவிஞன் எத்தனை எத்தனை இடர்பாடுகளின்
கடல்களை நீந்தி கடக்கிறான்.
கவிஞன் என்பவன் உண்மையில் யார் அவனுடைய வேட்கையும் அலைச்சலும்
எதை நோக்கி தீவிரப்பட்டுள்ளது என்பதை நான் சமீபத்தில் டெராக் வால்காட்டிடமிருந்து கற்றுக்
கொண்டதை முக்கியமாக இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.