நூல் பெயர் : கனவுப்பிரதிமை
(கவிதைகள் )
ஆசிரியர் : விஜி வெங்கட்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 98
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
கனவுகள் எப்போதும் நிஜங்களை விட அழகானவை. கனவுகளைத் தரிசிக்கும் கண்களின் ஒளி இருளில் கூட பிரகாசமானது. கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது இரவில் சூரியன் வருவதை, ஆனால் இரவில் வரும் சூரியனைக் கூட கனவில் பார்த்து விடமுடியும். அவை அத்தகைய வல்லமையைப் பெற்றவை. நமக்குள்ளே வந்தாலும் நமக்கு மட்டுமே வந்தாலும் நம் கண்களுக்கு மட்டுமே காட்சி தந்தாலும் கனவை நம்மால் சொந்தம் கொண்டாட முடியாது கடவுளைப் போல. இச்சமூகம் பற்றியும், மனிதகுல வாழ்வைப் பற்றியும், அவர்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளைப் பற்றியும் நாம் காணும் கனவே மிக உயர்ந்த கனவு. அப்படிப்பட்ட கனவுகளைக் கண்களில் அல்லாமல் கையிலேந்திக் கொள்ள விழையும் கவிதைகளாகத் தொகுத்திருப்பதே ‘கனவுப் பிரதிமை’ எனும் நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எளிய நடையில் இருப்பதும் அது வாசிப்பவர்களின் மனதில் மௌனமாய் நுழைந்து கனா போலக் காட்சிகளாக விரிந்து செல்லும் என்பதும் இந்நூலின் மிகப்பெரும் பலம்.
புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஹைதராபாத்தை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி விஜி வெங்கட் அவர்களுக்கு இது முதல் நூல். இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிகை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளாலும், பட்டிமன்றங்களாலும், சொற்பொழிவுகளாலும் நன்கு அறியப்பட்டவர். ‘இலக்கியச் சுடர்’, ‘செந்தமிழ்ச் செம்மல்’ விருதுகள் உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.