நூல் பெயர்: யமுனா என்றொரு வனம்
ஆசிரியர்: ஆண்டன் பெனி
பதிப்பு: இரண்டாம் பதிப்பு 2020
பக்கங்கள்: 116
முகப்பு: இசாக்
வடிவமைப்பு: ஐசக்
வெளியீடு: படைப்பு பதிப்பகம்
விலை: ரூ.100
முடிவில்லாத வனாந்திரப் பயணம் காதல் அந்தப் பயணத்தின் பாதையில் முத்தங்களை மைல்கல்லாகப் பதித்து முன்னேறிப்போகிறார் படைப்பாளி ஆண்டன் பெனி.
மகளதிகாரம் எழுதி பாசத்தைப் பொழிந்தவர் காதலதிகாரம் எழுதி நேசத்தைப் பொழிகிறார்.
காதலில் எந்த அதிகாரமும் எடுபடுவதில்லை. அங்கு சரணாகதி தருகிற பலனை வேறெதுவும் தந்துவிட முடியாது. கலந்து கரைதல் அல்லது கரைந்து கலத்தல் அதன் இயல்பு.
சின்னச் சின்ன மழைத்துளிகளாக சிதறி விழுந்திருக்கும். இந்த சித்திரக் கவிதைகளில் அது அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட அழகான கவிதைகளை தொகுத்து நூலாக்கியதே "யமுனா என்றொரு வனம்" தொகுப்பு.
தூத்துக்குடியைப் பிறப்பிடமாகவும் திருச்சியை வாழ்விடமாகவும் கொண்டுள்ள ரவிக்குமார் என்கிற ஆண்டன் பெனி அவர்களுக்கு இது ஐந்தாம் தொகுப்பு. இவர் வாரப்பத்திரிக்கைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தன் எதார்த்தமிக்க பல படைப்புகளால் நன்கறியப்பட்டவர். இவரது முதல் தொகுப்பான "இந்த பூமிக்கு வானம் வேறு" படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது இவருக்கு. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.